Information Technology

ஏ.சி.டி அறிமுகப்படுத்தவுள்ள ஸ்டீரிம் டிவி 4கே!!


ஏ.சி.டி ஸ்டீரிம் டிவி 4கே வினை பிராட்பேண்ட் வாடிக்கையாளர்களுக்கு அறிமுகம் செய்துள்ளது. பிரைம் வீடியோக்கள் மற்றும் நெட்ஃபிக்ஸ் போன்ற ஸ்ட்ரீமிங் போன்ற தளங்களில் செயல்படும் என்பதால் விவரங்கள் வெளிவந்த உடனே சிறப்பான வரவேற்பினைப் பெற்றுள்ளன.

இந்த சாதனத்தை வாங்க ரூ.1500 வரை கொடுத்து முன்பதிவு செய்ய வேண்டும், இந்த முன்பதிவு கட்டணமானது, ரீசார்ஜ் செய்யும் போது பயன்படுத்திக் கொள்ள முடியும்.

ஏ.சி.டி ஸ்டீரிம் டிவி 4கே சாதனம் மினியேச்சர் செட்-டாப் பாக்ஸ் போல கருப்பு நிறத்தில் உள்ளது.

இக்கருவியின் பின்புறம் வலது பக்கத்தில் போர்ட் அமைப்புகள் இடம்பெற்றுள்ளது. பின்புற பேனலில் எஸ்பிடிஎஃப் போர்ட், ஆடியோ அவுட்,முழு அளவிலான எச்டிஎம்ஐ போர்ட், லேன் போர்ட், ஹெட்போன் ஜாக் மற்றும் பவர் உள்ளீட்டுக்கான உள்ளது.

வலது பக்கத்தில், இரட்டை யூ.எஸ்.பி-ஏ போர்ட் மற்றும் மைக்ரோ எஸ்.டி கார்டு ஸ்லாட்டைக் கொண்டுள்ளது.

நிச்சயம் இந்த டிவி அதிக வரவேற்பினைப் பெறும் என்று விற்பனையாளர்கள் தரப்பில் கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது, மற்றொருபுறம், மக்களும் இதன் பயன் கருதி இதனை வெகுவாக ஆதரித்துவருகின்றனர்.

Related posts

கொரானோ வைரஸால் சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழா ரத்து!!

TechNews Tamil

ஒருநாளைக்கு 3ஜிபி டேட்டா. அதிரடியாக களமிறங்கும் பி.எஸ்.என்.எல்!

TechNews Tamil

சந்திரயான் 3, ககன்யான் திட்டம், தூத்துக்குடியில் ஏவுதளம் என லிஸ்ட்டுடன் களமிறங்கும் இஸ்ரோ!!

TechNews Tamil