Gadgets

ஆப்பிள் ஸ்டோரிலிருந்து திருடப்பட்ட ஐபோன்களை டிராக் செய்யும் பணி துவக்கம்!!

அமெரிக்காவில் கருப்பு இன நபரான ஜார்ஜ் பிளாய்ட்  என்பவரை அமெரிக்க போலீஸ் அதிகாரி முழங்காலால் கழுத்தில் அழுத்தி, துடிதுடிக்க கொன்ற சம்பவம் அரங்கேறியது. இதனால் கருப்பு இனத்தவருக்கு நடந்த அநீதிக்கு நீதி வேண்டி

அமெரிக்காவின் வெள்ளை மாளிகை முன்பு மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

அதுமட்டுமல்லாது இன்னபிற இடங்களிலும் போராட்டங்கள் வெடிப்பதைத் தொடர்ந்து, அமெரிக்காவில் பல இடங்களில் தொடர் திருட்டு சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. அந்தவகையில் ஆப்பிள் விற்பனை மையங்களில் சமீபத்தில் ஐபோன்கள் திருடப்பட்டன.

ஆப்பிள் ஸ்டோரிலிருந்து திருடப்பட்ட ஐபோன்களை டிராக் செய்யும் பணி துவக்கம்!!

போராட்டங்களுக்கு இடையே போலீசாரால் ஐபோன் திருட்டு வழக்கில் கவனம் செலுத்த முடியாத நிலையில், தற்போது திருடப்பட்ட ஐபோன்களை டிராக் செய்ய துவங்கிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் திருடப்பட்ட ஐபோன் மாடல்களின் புகைப்படங்களை  ட்விட்டரில் பதிவிட்டு, “திருடிய ஐபோன்களை கோண்டுவந்து திரும்ப ஒப்படைத்துவிடுங்கள், இல்லையெனில் இவை டிராக் செய்யப்பட்டு செயலிழக்க செய்யப்படும். மேலும் திருடியவர்களுக்கு தண்டனை கொடுக்க உள்ளூர் அதிகாரிகளுக்கும் தகவல் அளிக்கப்படும்.

ஆப்பிள் ஸ்டோர்களில் காட்சிக்கு வைக்கப்படும் ஐபோன்களில் டிராக்கிங் மென்பொருள் இன்ஸ்டால் செய்யப்பட்டு இருப்பதால், எளிதில் திருடப்பட்ட ஐபோன்களை டிராக் செய்ய முடியும்.

அமெரிக்காவில் கொரோனா ஊரடங்கு காரணமாக, மூடப்பட்டு இருந்த ஆப்பிள் விற்பனை மையங்கள் 50 நாட்களுக்குப் பின்னர் சமீபத்தில்தான் திறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related posts

சியோமியின் Mi டி.வி. 5 சீரிஸ் டீசர் வெளியீடு

TechNews Tamil

ஹுவாய் நிறுவனத்தின் முதல் பாப் அப் கேமரா கொண்ட ஹுவாய் விஷன் ஸ்மார்ட் டிவி!!

TechNews Tamil

சீனாவில் அறிமுகமானது 98 இன்ச் ரெட்மி டிவி!

TechNews Tamil