ரியல்மி நிறுவனத்தின் Realme 3i இன்று மீண்டும் இந்தியாவில் விற்பனைக்கு வந்துவிட்டது.
ப்ளிப்கார்ட் மற்றும் ரியல்மி இந்தியா வலைத்தளம்
வழியாக தொடங்கும். விலை நிர்ணயத்தை பொறுத்தவரை, ரியல்மி 3ஐ ஸ்மார்ட்போனின் 3 ஜிபி ரேம் +/ 32 ஜிபி ஸ்டோரேஜ் மாடல் ஆனது ரூ.7,999/-க்கும், அதன் 4 ஜிபி ரேம் + 64 ஜிபி ஸ்டோரேஜ் மாடல் ஆனது ரூ.9,999/-க்கும் வாங்க கிடைக்கும்.
விற்பனை சலுகைகளை பொறுத்தவரை, ப்ளிப்கார்ட்டில், ஆக்சிஸ் வங்கி கடன்
அட்டையின் மூலமாக வாங்கினால் 5 சதவீதம் கேஷ்பேக்
கிடைக்கும். ஒருவேளை எச்.டி.எஃப்.சி வங்கி டெபிட் கார்டுகள் மூலமாக வாங்கினால் 5 சதவீதம் கேஷ்பேக் கிடைக்கும்.

ஆக்சிஸ் வங்கி பஸ் கிரெடிட் கார்டுகளுக்கு 5 சதவீதம் தள்ளுபடி மற்றும் ப்ளிப்கார்ட்டிலிருந்து டிவி வாங்குவதற்கு
ரூ.1,000/- தள்ளுபடி ஆகிய இரண்டும் கிடைக்கும். மறுகையில் உள்ள ரியல்மி இந்தியா
இணையதளத்தில், மொபிக்விக்
பரிவர்த்தனைகளுக்கு 10% சூப்பர் கேஷ் கேஷ்பேக்
வாய்ப்பும், ரூ.5,300/- மதிப்பிலான ரிலையன்ஸ்
ஜியோவின் சலுகையும் அணுக கிடைக்கும்.
ஆண்ட்ராய்டு 9.0 பை
அடிப்படையிலான கலர்ஓஎஸ் 6.0 கொண்டு இயங்கும் ரியல்மி 3ஐ ஆனது கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு கொண்ட 6.2 இன்ச் எச்டி+ டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது. முன்னர் குறிப்பிட்டபடி, இது ஹீலியோ பி 60 SoC ப்ராசஸர் உடனான 3 ஜிபி அல்லது 4 ஜிபி ரேம் கொண்டு
இயக்கப்படுகிறது. இது முறையே 32 ஜிபி மற்றும் 64 ஜிபி அளவிலான உள்ளடக்கப்பட்ட சேமிப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது.