மத்திய அரசாங்கத்தினால் நடத்தப்படும் டெலிகாம் நிறுவனமான BSNL, அதன் சந்தாதாரர்களுக்காக புதிய ஸ்டார் மெம்பர்ஷிப் எனும் திட்டமொன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.
Prepaid Plan ஆன இந்த புதிய பிஎஸ்என்எல் ஸ்டார் மெம்பர்ஷிப் திட்டத்தின் மதிப்பு ரூ.498/- ஆகும்.
ரூ.498/- மதிப்பிலான இந்த ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தின் செல்லுபடி காலம் 30 நாட்கள் ஆகும். நன்மைகளை பொறுத்தமட்டில், 30GB அளவிலான அதிவேக டேட்டா மற்றும் வரம்பற்ற உள்ளூர் மற்றும் தேசிய குரல் அழைப்புகள் போன்றவைகளை எந்தவிதமான தினசரி வரம்பும் இல்லாமல் வழங்குகிறது.

இத்திட்டத்தின் கீழ், மும்பை மற்றும் டெல்லி வட்டங்களை தவிர்த்து இதர வட்டங்களில் இருக்கும் எந்தவொரு நெட்வொர்க் உடனான வரம்பற்ற ரோமிங் அழைப்பும் இலவசமாக கிடைக்கிறது. உடன் 1,000 உள்ளூர் மற்றும் தேசிய SMS-களையும் இலவசமாக பெறலாம்.
இந்த திட்டத்தின் ஒட்டுமொத்த செல்லுபடியாகும் காலம் 365 நாட்கள் என்றாலும் கூட, இதன் அழைப்பு, டேட்டா மற்றும் எஸ்எம்எஸ் நன்மைகளானது வெறும் 30 நாட்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும். அது முடிந்த பின்னர், திட்டத்தை ஆக்டிவ் ஆக வைத்துக்கொள்ள மீண்டும் ரீசார்ஜ் செய்ய வேண்டும்.
அடுத்தடுத்த ரீசார்ஜ்களை செய்யும் போது (நிறுவனத்தின் STV 97 திட்டமானது ரூ.76/-க்கும் மற்றும் STV 477 திட்டமானது ரூ.407/-க்கும் என்கிற தள்ளுபடி விலையில் அணுக கிடைக்கும். தற்போது வரையிலாக, இந்த திட்டம் ஆந்திரா மற்றும் தெலங்கானா வட்டாரங்களில் உள்ள பயனர்களுக்கு மட்டுமே கிடைக்கப்பெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.