உலக அளவில் பல மில்லியன் கணக்கானோர் பயன்படுத்தும் ஒரு செயலி வாட்ஸ்ஆப் ஆகும்.
இது பயனர்களைக் கவர பல்வேறு அம்சங்களை அவ்வப்போது வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது, குறிப்பிட்ட நேரத்துக்குப் பின், மெசெஜ் ஆனது தானாகவே அழியும் வசதியை அறிமுகம் செய்யவுள்ளதாக தகவலை வெளியிட்டுள்ளனர்.
சமீபத்தில் அறிமுகமான, செய்தியை அனுப்பி, பெறுபவர் பார்ப்பதற்கு முன் அந்த செய்தியை ரத்து செய்யும் வசதி பயனர்களிடையே பெறும் வரவேற்பினைப் பெற்றது.

அதாவது தகவலை பெறுபவர் படித்து முடித்து சில நேரத்துக்குப் பின்னர், அந்த செய்தி, தானாகவே அழியும் வசதியை அறிமுகம் செய்யவுள்ளது வாட்ஸ் அப்.
உண்மையிலேயே இது மிகச் சிறப்பான வரவேற்பினை பயனர்கள் மத்தியில் பெறும் என பலரும் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டு உள்ளனர்.