Gadgets

சோனி நிறுவனத்தின் ரியோன் பாக்கெட் ஏ.சி.!!

அடிக்கும் வெயிலில் வெளியே செல்ல வேண்டும் என்றாலே தலை சுற்றுகிறதா? இந்தக் கொடுமையான வெயிலிலிருந்து தப்பிக்க எங்கு சென்றாலும் எடுத்து செல்ல பாக்கெட் ஏ.சி.யை தயாரித்து உள்ளது சோனி நிறுவனம்.

இந்த ஏ.சியின் பெயர் ரியோன் பாக்கெட் ஏ.சி. ஆகும், இந்த ஏ.சி.யை புளூடூத் 5.0 மூலம் இணைத்து பயன்படுத்தலாம்.

சோனி நிறுவனத்தின் ரியோன் பாக்கெட் ஏ.சி.!!

மேலும் இந்த ரியோன் பாக்கெட் ஏ.சி. கருவியானது சார்ஜ் செய்யும் வகையில் அமைந்திருப்பது ஆகும்.

ஒரு முறை சார்ஜ் செய்தால் 24 மணி நேரம் பயன்படுத்திக்கொள்ள முடியும்.

இந்த ஏ.சி.யானது ஐ.ஓ.எஸ். மற்றும் ஆண்ட்ராய்டு இயங்குதளங்களில் செயல்படக் கூடியது.

இந்த ரியோன் பாக்கெட் ஸ்டாண்டர்டு மற்றும் ரியோன் பாக்கெட் லைட் என்ற இரண்டு மாடல்களில் வந்துள்ளது. இந்த ஏ.சி.யின் விலையானது பட்ஜெட் விலையில் இருப்பதால், பலரால் விரும்பப்படுகிறது.

இதை டிஜிட்டலாக செய்வது மிகக் கடினமாகும். இனிவரும் புதிய மாடல்களில் ஆட்டோமேடிக் வசதியும் கொண்டுவரப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த ரியோன் பாக்கெட்டின் விலை ரூ.8,091 முதல் ரூ.12,067 வரை விற்பனையாகிறது.

Related posts

ஆசஸ் நிறுவனத்தின் ஆசஸ் ஜென்புக் 17 ஃபோல்ட் மாடல் வெளியீடு!

TechNews Tamil

இந்தியாவில் வெளியானது லெனோவோ நிறுவனத்தின் லெனோவோ யோகா 6 லேப்டாப்!!

TechNews Tamil

அசத்தலான அம்சங்களுடன் அறிமுகமானது Vu நிறுவனத்தின் ஸ்மார்ட் டிவிகள்!

TechNews Tamil