Gadgets

சிறப்பான அம்சங்களுடன் சோனி வாக்மேன்

சோனி நிறுவனம் புதிய வாக்மேன் ஒன்றை அறிமுகம் செய்ய இருப்பதாகவும், இதில் அதிநவீன அம்சங்கள் வழங்கப்படும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

புதிய சோனி வாக்மேன் வைபை கனெக்டிவிட்டி (2.4/5.0GHz) இருக்கும் என்பதால் இது சந்தையில் மிகுந்த வரவேற்பினைப் பெறும் என்பதில் சந்தேகமில்லை.

சிறப்பான அம்சங்களுடன் சோனி வாக்மேன்

இத்துடன் ப்ளூடூத் 5.0 வசதி மூலம் வயர்லெஸ் மியூசிக் அனுபவத்தை பெற முடியும். என்.எஃப்.சி. கனெக்டிவிட்டி ஆப்ஷன் மூலம் வயர்லெஸ் சாதனங்களுடன் இணைத்து பயன்படுத்த முடியும் எனவும்  தகவல்கள் வெளியாகியுள்ளன.

வைபை கனெக்டிவிட்டி இருப்பதால் புதிய வாக்மேன் கொண்டு கோபுஸ், டைடல், ஸ்பாடிஃபை போன்ற சேவைகளையும் பயன்படுத்த முடியும். சோனி வாக்மேன் சாதனம் பிளேபேக் DSD, WAV மற்றும் FLAC ஃபைல்களை இயக்கும் வசதியும் உள்ளது.

புதிய வாக்மேன் சாதனத்தை சோனி நிறுவனம் பெர்லின் நகரில் நடைபெற இருக்கும் ஐ.எஃப்.ஏ. 2019 விழாவில் அறிமுகம் செய்யலாம் எனக்  கூறப்பட்ட தகவல் தற்போது உறுதியாகியுள்ளது.

இந்த வாக்மேன் செப்டம்பர் முதல் வாரத்தில் வெளியாகும் என அதிகாரப் பூர்வத் தகவலும் வெளியாகியுள்ளது.

Related posts

விற்பனைக்கு வரவுள்ள ஐபேட் 2019!

TechNews Tamil

அதிரடியாக அறிமுகமானது ஹெச்பி லேப்டாப்!

TechNews Tamil

நாளை அறிமுகமாகிறது சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்6 5ஜி டேப்லெட்!

TechNews Tamil