Gadgets

மூன்று வயர்லெஸ் ஸ்பீக்கர்களை அறிமுகம் செய்துள்ள சோனி நிறுவனம்!!

சோனி நிறுவனம்  தற்போது மூன்று வயர்லெஸ் ஸ்பீக்கர்களை இந்தியாவில் அறிமுகம் செய்து உள்ளது. இந்த ஸ்பீக்கர்களாவது எஸ்ஆர்எஸ்-எக்ஸ்பி43, எஸ்ஆர்எஸ்-எக்ஸ்பி33 மற்றும் எஸ்ஆர்எஸ்-எக்ஸ்பி23 போன்றவைகள் ஆகும்.

 இந்த மூன்று ஸ்பீக்கர்களும் ஐபி67 தர சான்று, எக்ஸ்ட்ரா பாஸ் சவுண்ட் தொழில்நுட்பம், யுஎஸ்பி டைப்-சி சார்ஜிங், வாய்ஸ் அசிஸ்டண்ட் வசதி, பில்ட் இன் மைக்ரோபோன் போன்ற அம்சங்களைக் கொண்டுள்ளது.

மூன்று வயர்லெஸ் ஸ்பீக்கர்களை அறிமுகம் செய்துள்ள சோனி நிறுவனம்!!

இந்த ஸ்பீக்கர் சிறப்பான ஆடியோவினை வழங்குவதாகவும் உள்ளது. இது ஷாக்ப்ரூஃப் பில்டு மற்றும் ஐபி67 தர வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட் வசதியினைக் கொண்டுள்ளது. இந்த ஸ்பீக்கர் மாடல் பில்ட் இன் மைக் மற்றும் வாய்ஸ் அசிஸ்டண்ட் வசதி கொண்டுள்ளது.

இந்த ஸ்பீக்கர்கள் பார்டி கனெக்ட் அம்சம் கொண்டதாகவும், மேலும் இது  சோனி மியூசிக் சென்ட்டர் ஆப் மூலம் மியூசிக் மற்றும் லைட்னிங் உள்ளிட்டவற்றை மாற்றிமையக்க கூடியதாக உள்ளது.

இந்த சிறப்புமிக்க அம்சமானது சோனி எஸ்ஆர்எஸ்-எக்ஸ்பி43 மற்றும் எஸ்ஆர்எஸ்-எக்ஸ்பி33 என இரண்டு மாடல்களில் மட்டும்  வழங்கப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது.

Related posts

ஆப்பிள் நிறுவனம் வெளியிட்டுள்ள 13 இன்ச் மேக்புக் ப்ரோ மாடல்!!

TechNews Tamil

ஆப்பிள் வாட்ச் எஸ்இ மாடலில் சூடாகும் பிரச்சனை.. பயனர்கள் புகார்!!

TechNews Tamil

அறிமுகமானது லெனோவா ஐடியாபேட் ஸ்லிம் 3 லேப்டாப்!!

TechNews Tamil