Apps

வாட்ஸ் அப்பில் வந்துள்ள சிறப்பு அம்சங்கள்!

ஆப்பிள் போனில் ஸ்டிக்கர்களை அறிமுகப்படுத்தியது வாட்ஸ் அப். வாட்ஸ் அப்பில் இயல்பாக கொடுக்கப்படும் ஸ்டிக்கர்களை தவிர்த்து கூகுள் பிளேயில் நமக்கு பிடித்தமான ஸ்டிக்கர்களை டவுன்லோட் செய்து கொள்ளலாம். இந்த ஸ்டிக்கர்கள் கிளாக்(கடிகாரம்), ஸ்டார் மற்றும் ஹார்ட் என்ற குறியீடுகளால் வகைப்படுத்தப்பட்டுள்ளது.

வாட்ஸ் அப்பில் வந்துள்ள சிறப்பு அம்சங்கள்!

மேலும் குரூப் சாட்டில் ஒருவருக்கு மட்டும் தனியாக பதிலளிக்கலாம். அதை குரூப்பில் இருக்கும் மற்றவர்களால் காணமுடியாது இந்த வசதியை பீட்டா வெர்ஷன் 2.18.355 பயன்பாட்டாளர்களுக்கு வாட்ஸ் அப் அறிமுகப்படுத்தியது.

கூகுள்பிளேயில் பீட்டா ப்ரோகிராமில் அங்கமான பின்பு வாட்ஸ் அப்பில் வலது பக்க மூலையில் வரிசையாக இருக்கும் புள்ளிகளை தொட்டதும் குரூப் சாட்டில் தனியாக பதிலளிக்க வேண்டிய நபரின் மெசேஜை தேர்வு செய்து பதிலளிக்கும் ஆப்ஷன் உள்ளது.

தற்போது வாட்ஸ் அப் ஜியோ போன் பயன்பாட்டாளர்களுக்கும் தங்களது சேவையை நீட்டித்துள்ளது. வாட்ஸ் அப் நிறுவனம் தங்களது சேவையை ஜியோ போன் பயன்பாட்டாளர்களுக்கு செப்டம்பர் மாதம் முதல் வழங்கி வருகிறது.

இந்த அப் மூலம் வாய்ஸ் மெசேஜ் அனுப்பலாம். ஆனால் பயன்பாட்டாளர்கள் நேரடியாக வாய்ஸ் கால் மற்றும் வீடியோ கால் செய்ய அனுமிதப்பதில்லை.
 

Related posts

விளம்பரதாரர்களிடம் வசூல் செய்ய காத்திருக்கும் வாட்ஸ் அப்!

TechNews Tamil

போன் இல்லாமலேயே வாட்ஸ்ஆப் பயன்படுத்த வேண்டுமா?

TechNews Tamil

அமேசானின் 5 வது ஆண்டுவிழா கொண்டாட்டத்திற்கான விற்பனை ஆரம்பம்!!

TechNews Tamil