ஜியோனி நிறுவனமானது ஸ்மார்ட்வாட்ச்சை இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படுத்தியுள்ளது. மேலும் இது செப்டம்பர் 14ஆம் தேதியிலிருந்து விற்பனைக்கு வருகிறது.
2,999 ரூபாய்க்கு அறிமுகமாகியுள்ள இந்த ஸ்மார்ட்வாட்ச், பெரும்பாலானவர்களைக் கவரும் வகையிலான அம்சங்களைக் கொண்டுள்ளது.
இந்த ஸ்மார்ட் வாட்ச் நாள் முழுதும் இதய துடிப்பை கண்காணிக்கும் சென்சாரைக் கொண்டுள்ளது, மேலும் இது கலோரி மீட்டர், உடற்பயிற்சி, என பலவற்றை கண்காணிக்கக் கூடியதாக உள்ளது.

இதன்மூலம் கால் செய்யவும் முடியும் மற்றும் மெசேஜ்களை அனுப்பவும் முடியும். ஜியோனியின்
இது 1.3-இன்ச் IPS கலர் திரையை கொண்டுள்ளதுடன், 2.5D கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பையும், 5 ATM வரையிலான தண்ணீர் அழுத்தத்தை தாங்கும் திறனையும் கொண்டதாக உள்ளது.
பெரும்பாலான வாடிக்கையாளர்களைக் கவரும் வகையில், உடல்நிலை குறித்த எச்சரிக்கைகள், மெமரி குறித்த எச்சரிக்கைகள், அலாரம், மியூசிக் கன்ட்ரோல், போன்ற சிறப்பான அம்சங்கள் உள்ளது. 210mAh அளவு பேட்டரி கொண்டுள்ளது.