டிரான்ஷன் நிறுவனம் தற்போது புதிய ஐடெல் விஷன் 1 என்ற ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது.
ஐடெல் விஷன் 1 ஸ்மார்ட்போனின் விலை – ரூ.5,499
ஐடெல் விஷன் 1 ஸ்மார்ட்போன் 6.08 இன்ச் எச்டி பிளஸ் ஐபிஎஸ் டிஸ்பிளேவினைக் கொண்டுள்ளது, மேலும் இந்த ஸ்மார்ட்போன் 1560 x 720 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட்தாக உள்ளது.
இந்த புதிய ஸ்மார்ட்போன் ஆனது 1.6ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோ-கோர் Unisoc SC9863A பிராசஸர் வசதியையும் IMG8322ஜிபயு ஆதரவையும் கொண்டதாக உள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 9.0பை இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இயங்கும் தன்மை கொண்டதாக உள்ளது.

கேமராவைப் பொறுத்தவரை இந்த ஸ்மார்ட்போன் பின்புறத்தில் 8எம்பி பிரைமரி லென்ஸ், 0.08எம்பி செகன்டரி சென்சார் என்ற இரண்டு கேமராக்களைக் கொண்டுள்ளது. மேலும் முன்புறத்தில் 5எம்பி செல்பீ கேமராவினைக் கொண்டுள்ளது.
இந்த ஸ்மார்ட்போன் ஆனது 4000எம்ஏஎச் பேட்டரி கொண்டு சக்தியூட்டுவதாய் உள்ளது. மேலும் இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை இந்த ஸ்மார்ட்போன் 4ஜி வோல்ட்இ, வைஃபை, டூயல்-சிம்,மைக்ரோ யுஎஸ்பி போர்ட், புளூடூத் போன்றவற்றினைக் கொண்டுள்ளது.
மெமரியினைப் பொறுத்தவரை இந்த ஸ்மார்ட்போன் 2ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி உள்ளடக்க மெமரி வசதி கொண்டுள்ளது.