45 நாட்கள் பேட்டரி சார்ஜ் நீடித்து நிற்கும் ஸ்மார்ட்வாட்ச் ஒன்றை ஹூவாமி நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இதில் கிளியர் டிஸ்ப்ளே, இதய துடிப்பு உணர் கருவி என பல்வேறு சிறப்பம்சங்கள் உள்ளன.
தற்போது எம்.ஐ நிறுவனத்தின் துணை பிராண்டானஹூவாமி
நிறுவனம் புதிதாக ‘அமேஸ் ஃபிட்’ என்ற ஸ்மார்ட்வாட்ச்சை அறிமுகம்
செய்துள்ளது.
அமேஸ்
ஸ்மார்ட்வாட்சை ஒரு முறை சார்ஜ் ஏற்றி விட்டால் போதும். 45 நாட்கள்
வரையில் சார்ஜ் தொடர்ந்து நீடித்து நிற்கும். இதில் சிறிய அளவு திரை
டிஸ்ப்ளேயாக உள்ளது. மேலும், இதய துடிப்பை உணரக்கூடிய
சென்சார்களும் உள்ளது.

அதன்மூலம் நம்முடைய இதய துடிப்பு எவ்வாறு இயங்குகிறது என்பதை
அறியலாம். ஆண்ட்ராய்டு, ஐஓஎஸ் என இரண்டு
இயங்குதளங்களிலும் அமேஸ் ஸ்மார்ட்வாட்ச் உள்ளது. மேலும், ஏதேனும்
ஆப் நோட்டிபிக்கேஷன் வந்தால் கூட இதன்மூலம் தெரிந்து கொள்ள முடியும். இதே
போல், மொபைல் போனுடன் கனெக்ட் செய்யப்பட்டிருக்கும்
போது, நமது போனில் வாய்ஸ் கால், எஸ்எம்எஸ்
வந்தால், அத்தகைய நோட்டிபிகேஷன்களையும்
உடனுக்குடன் தெரிந்து கொள்ள முடியும்.
இதய துடிப்பு
உணருவதற்காக PPG சென்சார் உள்ளது. வரும் 15ம் தேதி
முதல் ஹூவாமி அமேஸ் ஸ்மார்ட்வாட்ச் விற்பனைக்கு வருகிறது. விலை 3,999
ரூபாய் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.