Mobile

இங்கிலாந்தில் அறிமுகமானது ஹானர் 8 எஸ் (2020) என்ற ஸ்மார்ட் போன்!!

ஹானர் நிறுவனம், தற்போது ஹானர் 8 எஸ் (2020) என்ற ஸ்மார்ட் போனை இங்கிலாந்தில் அறிமுகம் செய்துள்ளது. 

இந்த ஸ்மார்ட்போன் ஆனது 2019 ஆம் ஆண்டு வெளியான ஹானர் 8 எஸ் இன் சிறப்பு அம்சத்துடன் ஒத்ததாக உள்ளது குறிப்பிட்த்தக்கது. இந்த ஹானர் 8 எஸ் (2020) ஸ்மார்ட்போன் குறித்த சிறப்பு அம்சங்களை நாம் பார்க்கலாம்.

ஹானர் 8 எஸ் (2020) ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 9 பை ஐஎம்யூஐ 9.0 உடன் இயங்குதளம் கொண்டு இயங்குவதாய் உள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் ஆனது 5.71 இன்ச் எச்டி உடன் 720×1,520 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட டிஸ்ப்ளேவினைக் கொண்டுள்ளது.

இங்கிலாந்தில் அறிமுகமானது ஹானர் 8 எஸ் (2020) என்ற ஸ்மார்ட் போன்!!

ஹானர் 8 எஸ் ஸ்மார்ட்போன் குவாட் கோர் மீடியாடெக் ஹீலியோ ஏ 22 SoC  கொண்டுள்ளது. மெமரி அளவினைப் பொறுத்தவரை இந்த ஸ்மார்ட்போன் ஆனது3 ஜிபி ரேம் கொண்டுள்ளது.

கேமராவினைப் பொறுத்தவரை, பின்புறத்தில் 13 மெகாபிக்சல் பின்புற கேமரா,  முன்புறத்தில் 5 மெகாபிக்சல் முன் புற கேமரா கொண்டுள்ளது. மேலும் இது 3,020 எம்ஏஎச் பேட்டரி கொண்டு சக்தியூட்டுவதாய் உள்ளது.

இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை இந்த ஹானர் 8 எஸ் (2020) ஸ்மார்ட்போன் ஆனது 4 ஜி எல்டிஇ, வைஃபை 802.11 பி / ஜி / என், புளூடூத் 5.0, ஜிபிஎஸ், மைக்ரோ-யூ.எஸ்.பி 2.0 மற்றும் கைரேகை சென்சார் கொண்டுள்ளது.

Related posts

இந்தியாவில் இன்று அறிமுகமான ரியல்மி எக்ஸ்2 ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil

ஒரு வழியாக அறிமுகமானது ரியல்மி எக்ஸ்2 ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil

ஆண்ட்ராய்டு 10 அப்டேட் பெற்றுள்ள நோக்கியா 4.2 ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil