ஷின்கோ நிறுவனம், தற்போது 32-இன்ச் ஸ்மார்ட் எல்.இ.டி. டி.வி.யை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இதன் விலையினைக் கேட்டால், பலரும் அசந்துபோவீர்கள். இப்படி ஒரு விலையில் ஸ்மார்ட் டிவியா? என்று பலரும் அதிர்ந்து போய் உள்ளனர். அதன் விலை ரூ. 7,999 என்ற விலைக்கு விற்பனை ஆகவுள்ளது.
இந்த ஸ்மார்ட் எல்.இ.டி. டி.வி.யின் விற்பனையானது செப்டம்பர் 29 ஆம் தேதி துவங்கும் என அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவலின் போது விற்பனை ஆரம்பமாகும் என்று தெரிகிறது.

இந்த டி.வி. ஏ பிளஸ் கிரேடு பேனல் 1366×768 ரெசல்யூஷன் கொண்டதாக உள்ளது. மேலும் இதில் HRDP தொழில்நுட்பம் மற்றும் 20 வாட் ஸ்பீக்கர் அவுட்புட் போன்றவையும் அடக்கம்.
மேலும் இது ஆண்ட்ராய்டு டி.வி. குவாட் கோர் பிராசஸர், 1 ஜி.பி. ரேம், 8 ஜி.பி. மெமரி போன்றவற்றினைக் கொண்டுள்ளது.
இதில் இரண்டு ஹெச்.டி.எம்.ஐ. போர்ட்கள், இரு யு.எஸ்.பி. போர்ட்கள் மற்றும் 3.5 எம்.எம். ஆடியோ போர்ட் போன்றவற்றினைக் கொண்டிருக்கும்.
இதில் ஆண்ட்ராய்டு 7.0 & 8.0 இயங்குதளங்களை கொண்டு இயங்கும் தன்மை கொண்டது.