Mobile

ரெட்மி நோட் 8-ஐ சிறந்த ஸ்மார்ட்போன் என்று அறிவித்த சியோமி

பட்ஜெட் விலையிலான ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்வதில் பெயர்போன சியோமி நிறுவனம், சமீப காலமாக அதன் ரெட்மி வரிசையின் கீழ் சில முதன்மை ஸ்மார்ட்போன்களை களமிறக்கி வருகிறது.

அந்த வரிசையின் கீழ் Redmi Note 8 ஸ்மார்ட்போனும் அறிமுகமாகும் என்பதை சியோமி நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. 

ரெட்மி நோட் 8-ஐ சிறந்த ஸ்மார்ட்போன் என்று அறிவித்த சியோமி

இதற்கு முன்னர், M1906GT என்கிற மாடல் பெயரை தாங்கிய ஒரு சியோமி ஸ்மார்ட்போன் ஆனது லீக்ஸ் தகவலில் சிக்கியது. சான்றிதழ் தளத்தில் காணப்பட்டதாகக் கூறப்படும் அந்த பெயர் அறியப்படாத ஸ்மார்ட்போன் என்னவாக இருக்கும் என்பது குறித்து இரண்டு ஊகங்கள் உள்ளன.

ஒன்று, நிறுவனத்தின் 64MP கேமராவை கொண்ட ரெட்மி ஸ்மார்ட்போனாக இருக்கலாம் அல்லது MediaTek Helio G90T SoC மூலம் சக்தியூட்டப்படும் – மிகவும் எதிர்பார்க்கப்படும் – சியோமியின் கேமிங் ஸ்மார்ட்போனாக இருக்கலாம். 


லு வெயிபிங் அளித்த விளக்கத்தின் படி, ரெட்மி நோட் 8 ஆனது அதன் வளர்ச்சி பகுதியில் உள்ளது, ஏனெனில் இது மிகவும் “சக்திவாய்ந்த” ஒரு ஸ்மார்ட்போனாக இருப்பதை அவர்கள் உறுதி செய்ய விரும்புகிறார்கள். ஆகையால் இந்த இடத்தில் ரெட்மி நோட் 8 ஆனது MediaTek Helio G90T SoC கொண்டு வெளியாகும் என்பது நிச்சயமற்ற ஒன்றாகிறது. 


முன்னர் வெளியான தகவலின்படி, மீடியாடெக்கின் புதிய SoC ஆனது ஸியோமியின் கேமிங் ஸ்மார்ட்போனில் தான் இடம்பெறும் என்று கூறப்பட்டுள்ளது.

Related posts

சாம்சங் கேலக்ஸி A20s இன் அதிரவைக்கும் சிறப்பம்சங்கள்!

TechNews Tamil

ஸ்விட்சர்லாந்தில் விரைவில் வெளியாகவுள்ள சியோமி எம்ஐ11 ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil

அறிமுகமானது மோட்டோ ஜி8 பிளே ஸ்மார்ட்போன்!

TechNews Tamil