கூகுளின் செயலிகளில் ஒன்றான ஜூம் செயலியானது மற்ற காலங்களைவிட கொரோனாவால் உலகம் ஸ்தம்பித்துள்ள நிலையில் அதிக பயன்பாட்டினைக் கொண்டு இருந்தது, இந்த செயலி மூலம் பொதுவாக அனைவரும் வீடியோ காலிங்க் செய்து பேசி வந்தனர்.
இது சாதாரண நபர்களின் பயன்பாடாக மட்டும் அல்லாது, கார்ப்பரேட்டுகளிலும் உரையாடல்களை மேற் கொள்ள பயன்படுத்தப்பட்டு வந்தது. ஆன்லைன் மூலம் கற்பிக்க நினைப்போர் இதன்மூலமே கற்பித்து வந்தனர்.

சமீபகாலமாக ஜூம் வீடியோ சந்திப்புகளில், பாதுகாப்பின்மை அபாயம் நிலவி வருவதால், ஆசிரியர்கள் ஜூம் செயலி பயன்படுத்துவதை சிங்கப்பூர் நிறுத்தியதை அடுத்து, இந்திய மத்திய உள்துறை அமைச்சகமும் தடை செய்தது.
இந்தநிலையில், சிங்கப்பூர் நீதித்துறை வீடியோ கால் மூலம் குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கி உள்ள சம்பவம் ஒன்று நடந்துள்ளது. அதாவது 2011 ஆம் ஆண்டு போதை பொருள் கடத்தியதாக கைது செய்யப்பட்ட புனிதன் கெனேசன் என்பவருக்கு மரண தண்டனையினை சிங்கப்பூர் நீதிபதி ஜூம் வீடியோ கால் மூலம் தீர்ப்பு வழங்கினார்.
சிங்கப்பூரில் முதல் குற்ற வழக்கு வீடியோ கால் மூலம் மரண தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது வைரலான ஒரு செய்தியாக இருந்துவருகிறது.