Apps

வாட்ஸ்அப் செயலியினை அப்பட்டமாக காப்பி அடிச்ச சிக்னல் ஆப்!!

சமீபத்தில் வாட்ஸ்அப் செயலியின் பிரைவசி கொள்கைகள் மற்றும் பயன்பாட்டு விதிகள் மாற்றி அமைக்கப்பட்டது.

அதாவது சமீபத்தில் இந்தப் பாலிசியில் பயனர்கள் வாட்ஸ்அப்பினை  எவ்வளவு நேரம் பயன்படுத்துகின்றனர் இணையத்தில் எதுபோன்ற சேவைகளைப் பயன்படுத்துகின்றனர் என்பது போன்ற பிற இணையப் பயன்பாடுகளையும் கண்காணிக்க உள்ளதாகத் தகவல் வெளியாகின.

இதனால் வாட்ஸ் அப் பயனர்கள் பலரும் தங்களின் தனியுரிமையினைப் பாதிப்பதாக நினைத்து வாட்ஸ் ஆப் கொள்கைகளுக்கு ஒப்புதல் அளிக்காமல் வெளியேறி வருகின்றனர்.

வாட்ஸ்அப் செயலியினை அப்பட்டமாக காப்பி அடிச்ச சிக்னல் ஆப்!!

அந்தவகையில் வாட்ஸ் ஆப் போன்றே அம்சத்தினைக் கொண்டுள்ள சிக்னல் மற்றும் டெலிகிராம் செயலிகள் பயனர்கள் மத்தியில் அதிக அளவில் தரவிறக்கம் செய்யப்பட்டு வருகின்றது.

இந்தநிலையில் சிக்னல் ஆப் வாட்ஸ் ஆப்பின் இரண்டு முக்கிய அம்சங்களைக் காப்பி அடித்துள்ளதாக விமர்சனம் எழுந்துள்ளது. ஆண்ட்ராய்டு மற்றும் ஐஒஎஸ் பயனர்களுக்கான 5.3 வெர்ஷனில் வெளியான சாட் வார்பேப்பர் மற்றும் அனிமேஷன் அம்சங்கள்தான் அவைகள்.

அதாவது இந்த இரண்டு அம்சங்களிலும் உள்ள லாக் ஸ்க்ரீன், க்ரூப் கால், பின் சாட்ஸ் போன்றவை இரண்டு செயலிகளிலும் இருப்பதாகப் பயனர்கள் கூறியுள்ளனர்.

மற்றொருபுறம் இன்னும் சில பயனர்கள் இந்த மாற்றங்கள் வாட்ஸ் அப்பினைப் பயன்படுத்துவதுபோல் இருப்பதாகக் கூறியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

பிளிப்கார்ட் பிக் ஷாப்பிங் நாட்கள்: ரூ.20,000 தள்ளுபடியினைப் பெற்றுள்ள கேமிங்க் ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil

கையால் எழுதிய வார்த்தைகளை டிஜிட்டலாக மாற்றும் கூகுள் லென்ஸ்!!

TechNews Tamil

இனி வாட்ஸ்அப் வெப் வெர்ஷனிலும் ஆடியோ மற்றும் வீடியோ கால் வசதி!!

TechNews Tamil