Apps

வாட்ஸ்அப்பில் ஃபேஸ்புக் மெசஞ்சர் ரூம்ஸ் சேவைக்கான ஷார்ட்கட்!!

வாட்ஸ்அப் பேஸ்புக்கினை அடுத்து அதிகப் பயனர்களைக் கொண்டதாகவும் உள்ளது, வாட்ஸ் ஆப் பயன்படுத்தாத ஸ்மார்ட்போன் பயனர்கள் இருப்பது மிகவும் குறைவே ஆகும்.

வாட்ஸ்அப் பயனாளர்களுக்கு சிறப்பான பயன்களைக் கொண்ட புதிய அப்டேட்டுக்களை வாட்ஸ்அப் நிறுவனம் கொண்டு வரவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

மெசெஜ்க்கு அடுத்தபடியாக, வாட்ஸ்அப் தான், அனைவரும் பயன்படுத்தும்படி சிறப்பு அம்சங்களைக் கொண்டதாக உள்ளது. அதிக அளவு வாடிக்கையாளர்களைக் கொண்ட இந்த அப் சமூக வலைதளங்களில் மிகப் பிரபலமான ஒன்றாக உள்ளது.

வாட்ஸ்அப்பில் ஃபேஸ்புக் மெசஞ்சர் ரூம்ஸ் சேவைக்கான ஷார்ட்கட்!!

தற்போது வாட்ச் அப்பை மெருகூட்ட புதிய வசதிகள் வாட்ஸ்அப்பில் கொண்டு வரப்படுகிறது. வாட்ஸ் ஆப் பே, பல சாதனங்களில் ஒரே வாட்ஸ் ஆப், போலித்தகவல்களுக்கு லென்ஸ் சோதனை, கம்யூட்டரில் வாட்ஸ் ஆப், 8 பேர் வரை வீடியோ காலிங்க் வசதி, ஒரு நேரத்தில் ஒருவருக்கு மட்டுமே சேட் செய்யும் வசதி, வாட்ஸ் ஆப்பில் ஃபிங்கர் பிரிண்ட் லாக், டார்க் தீம் வசதி, விளம்பரங்களை நீக்குதல் போன்றவை இதுவரை செய்யப்பட்டுள்ளது.

அந்தவகையில் தற்போது வாட்ஸ்அப் வெப் வெர்ஷனில் புதிய அம்சம் ஒன்று வரவுள்ளது, அதாவது வாட்ஸ்அப் வெப் பதிப்பில் ஃபேஸ்புக் மெசஞ்சர் ரூம்ஸ் சேவைக்கான ஷார்ட்கட் வழங்கப்படுகிறது. தற்போது இதற்கான சோதனையானது செய்யப்பட்டு வருகிறது.

ஃபேஸ்புக் மெசஞ்சர் ரூம்ஸ் சேவையானது வாட்ஸ்அப், ஆண்ட்ராய்டு மற்றும் ஐஒஎஸ் வெர்ஷன்களிலும் கிடைக்கச் செய்யத் தேவையான சோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன.

Related posts

ஸ்விக்கி செய்த செயலால் மகிழ்ச்சியில் வாடிக்கையாளர்கள்!!

TechNews Tamil

இன்டர்நெட் இல்லாமல் பேலன்ஸ் தெரிந்துகொள்ள SBI Quick Missed Call Banking App!!

TechNews Tamil

அமெரிக்காவின் தடை உத்தரவை எதிர்த்து சட்ட நடவடிக்கை குறித்த அறிவிப்பை வெளியிட்ட டிக் டாக்!!

TechNews Tamil