Apps

வாட்ஸ்ஆப் ஸ்டேட்டஸை இனி பேஸ்புக்கில் பகிரலாம்!

வாட்ஸ்ஆப்பில் பகிரும் ஸ்டேட்டஸை பேஸ்புக்கில் பகிர பல காலமாக இளைஞர்கள் நினைப்பதுண்டு, ஆனால் இவை இரண்டிற்கும் இடையே இணைப்பு இல்லாததால் அதனை செய்ய முடியவில்லை.

தற்போது பேஸ்புக் மிகச் சிறப்பான அம்சத்தினை வாட்ஸ்ஆப்பில் இணைத்துள்ளது.  இந்த அம்சம் ஆண்ட்ராய்டு மட்டுமல்லாமல் ஃபேஸ்புக் பயனாளர்களுக்கும் பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது.

வாட்ஸ்ஆப் ஸ்டேட்டஸை இனி பேஸ்புக்கில் பகிரலாம்!

வாட்ஸ்ஆப்பில் உள்ள ஒரு ஸ்டேட்டஸை, பேஸ்புக்கில் இனி பகிர்ந்துகொள்ளக்கூடிய ஒரு புதிய வசதியினை  வாட்ஸ்ஆப்  செய்துள்ளது.

வரவுள்ளது என்கிற தகவல் மட்டுமே வந்து கொண்டிருக்க, தற்போது ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோனுக்கான வாட்ஸ்ஆப்பின் வெர்சனிலும், மேலும் ஆண்ட்ராய்டின் ஸ்டாண்டர்ட் மற்றும் பீட்டா பதிப்புகளிலும் இது வேலை செய்யும் என்று தெரிகிறது.

ஆண்ட்ராய்டு வெர்ஷன் 2.19.258 பதிப்பிலும், ஐபோன் வெர்ஷன் 2.19.92 பதிப்பிலும் இது கிடைக்கும்.

மேலும் கூடுதலாக முந்தைய ஸ்டாண்டர்ட் ஆண்ட்ராய்டு v2.19.244 மற்றும் தற்போதைய பீட்டா v2.19.262  ஆகியவற்றிலும் இது கிடைக்கும்.

இதன்மூலம் வாட்ஸ்ஆப்பில் ஸ்டேட்டஸை பேஸ்புக்கில் பகிர முடியும். அதாவது வாட்ஸ் ஆப்பில் Status Tab ற்கு கீழ் Share to Facebook Story எனும் ஆப்சனை செலக்ட் செய்து பகிரவும்.

Related posts

ஸ்மார்ட்போனில் மட்டும் உள்ள Instagram டெஸ்க்டாப்பிலும் வருகிறது!

TechNews Tamil

வாட்ஸ் அப் வேண்டாம்.. சிக்னல் மற்றும் டெலிகிராமுக்கு மாறிய பயனர்கள்!!

TechNews Tamil

வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ்களில் விளம்பரங்கள் கிடையாது… ஃபேஸ்புக் எடுத்த முடிவு!!

TechNews Tamil