உலக அளவில் பெரும்பான்மையான மக்கள் பயன்படுத்தும் சமூக வலைதளங்களில் ஒன்று, ட்விட்டர் ஆகும். ஃபேஸ்புக், வாட்ஸ் அப் மட்டுமின்றி ட்விட்டரும் அதிக அளவில் பயன்படுத்தப்படும் ஒரு சேவையாகும்.
தற்போது ட்விட்டர் மீது பயனர்கள் பல சர்ச்சைகளைக் கொண்டிருக்கின்றனர், அதாவது ட்விட்டர் பயனர் விவரங்களை அனுமதியின்றி விளம்பர நிறுவனங்களிடம் வழங்கிவிட்டதாக தகவல்கள் வெளியாகின. அதனை அடுத்து தளத்தில் இருந்த பிழைகள் சமீபத்தில் கண்டறியப்பட்டு அவை சரி செய்யப்பட்டு விட்டதாக ட்விட்டர் தரப்பில் தகவல் வெளியாகியுள்ளது.

இந்தநிலையில் தற்போது ஆண்ட்ராய்டு சாதனங்களில் ட்விட்டர் பயன்படுத்துவோர் உடனே செயலியை அப்டேட் செய்ய வேண்டும் என்று ட்விட்டர் அறிவித்துள்ளது. அதாவது ட்விட்டர் ஆண்ட்ராய்டு 8 மற்றும் 9 வெர்ஷன்களில் பாதுகாப்பு குறைபாடு உள்ளமையால், இது டிவிட்டர் செயலியை பாதித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது ஆண்ட்ராய்டு 8 மற்றும் 9 வெர்ஷன்களை மட்டும் குறிப்பிட்டு பாதித்து இருப்பதனால், அந்தப் பயனர்களின் தகவல்கள் வெளியாகி இருக்க வாய்ப்புகள் உள்ளதாகவும் கூறப்படுகின்றது. அதாவது இந்தப் பிழையை சரி செய்தபின்னர் இதுகுறித்த அறிவிப்பினை வெளியிடலாம் என்ற நோக்கில் தற்போது, செயலியினை அப்டேட் செய்யுமாறு அறிவுறுத்தியுள்ளது.