Gadgets

மின் வெட்டு நேரங்களில் பயன்படுத்தும் வகையிலான சோலார் லைட் கொண்ட ஸ்கூல் பேக்!!

எவ்வளவுதான் நவீன காலத்தை நோக்கி நாம் பயணித்தாலும், கிராமப்புறங்களில் மின் வெட்டு என்பது சற்று கூடுதலான ஒன்றாகவே உள்ளது. யூபிஎஸ் போன்ற தொழில்நுட்ப வசதிகள் இல்லாத மாணவர்கள் மின்சாரம் இல்லாத நேரங்களில் தடுமாறவே செய்கின்றனர்.

இந்த மின்வெட்டினால் அனைவரும் பாதிக்கப்பட்டாலும் பள்ளி மாணவர்கள் பெரிய அளவில் பாதிக்கப்படுகின்றனர். கிராமப்புற மாணவர்களின் சூழ்நிலையினைக் கருத்தில் கொண்டு அவர்களுக்கு உதவ வேண்டும் என்ற நோக்கில் இந்தியாவின் கௌகாத்தி ஐஐடி பேராசிரியை சாரு மோங்கா சோலார் லைட் கொண்ட பையினை கண்டுபிடித்துள்ளார்.

அதாவது சாரு மோங்கா அவ்வப்போது அறிவியல் சம்பந்தமாக கிராமப்புறங்களுக்கு பாடங்கள் நடத்துவதையும், அறிவியல் சார்ந்த விஷயங்களை விவாதிப்பதையும் வழக்கமாகக் கொண்டு இருந்தார்.

மின் வெட்டு நேரங்களில் பயன்படுத்தும் வகையிலான சோலார் லைட் கொண்ட ஸ்கூல் பேக்!!

அப்போது மாணவர்கள் கிராமத்தில் மின்வெட்டு அடிக்கடி நடப்பது குறித்தும் அதனால் படிப்பு பாதிக்கப்படுவது குறித்தும் கூறியுள்ளனர்.

சாரு மோங்கா மாணவர்களுக்கு உதவ வேண்டும் என்ற நோக்கில், ஒரு சோலார் விளக்கினைக் கொண்டு மறுசுழற்சி செய்யப்பட்ட பிளாஸ்டிக்கால் செய்யப்பட்ட ஒரு பையினை கண்டுபிடித்தார்.

இந்த பேக்கினை மின்சாரம் துண்டிக்கப்படும்போது பயன்படுத்திக் கொள்ளலாம். இந்தப் பையை தற்போதைக்கு 200 மாணவர்களுக்கு கொடுத்துள்ளார்.

Related posts

ஒரே நேரத்தில் 3 ஸ்மார்ட்போன்களை சார்ஜ் செய்ய ஏற்ற Mi Power Bank 3!

TechNews Tamil

9 லட்சம் ரூபாய் கேமரா 1 மணி நேரத்தில் விற்றுத் தீர இதுதான் காரணம்..

TechNews Tamil

வெறும் ரூ.10,499/-க்கு கிடைக்கும் RCA ஸ்மார்ட் டிவி!

TechNews Tamil