உலக அளவில் பெரும்பான்மையான மக்கள் பயன்படுத்தும் சமூக வலைதளங்களில் ஒன்று, ட்விட்டர் ஆகும். ஃபேஸ்புக், வாட்ஸ் அப் மட்டுமின்றி ட்விட்டரும் அதிக அளவில் பயன்படுத்தப்படும் ஒரு சேவையாகும்.
ட்விட்டரில் பயனர்களைக் கவரும் வகையில் பல புதிய அம்சங்கள் அவ்வப்போது வெளியிடப்பட்டு வருகிறது, அந்தவகையில் தற்போது ட்விட்டர் ஒரு அம்சத்தினை வெளியிட்டு பயனர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளித்துள்ளது.
அதாவது ட்விட்டரின் வெப் வெர்ஷனில் பயனர்களின் ட்விட்களை டிராஃப்ட் ஆக வைத்துக் கொண்டு, ஷெட்யூல் செய்து நாம் போஸ்ட் செய்ய முடியும், மேலும் இந்த சேவையினைப் பயன்படுத்த அதிக நேரம் செலவிடத்தேவையில்லை.

எளிமையான முறைகளின் மூலமே செய்து முடிக்கமுடியும், மேலும் இந்த அம்சமானது ட்விட்டர் வெப் மற்றும் மொபைல் வெப் பதிப்புகளில் வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
அதாவது ட்வீட் கம்போசர் அருகில் சிறிய காலெண்டர் ஐகான் எமோஜி பட்டன் உள்ளது. இதனை க்ளிக் செய்து, ஷெட்யூல் செய்து நாம் போஸ்ட் செய்ய முடியும்.
மேலும் இது அடுத்தகட்டமாக ஆண்ட்ராய்டு மற்றும் ஐஒஎஸ் பதிப்புகளிலும் வழங்கப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.