டெபிட் கார்டுகளைப் பயன்படுத்தி செய்யப்படும் மோசடிகள் அதிகமானதைத் தொடர்ந்து, எஸ்பிஐ தற்போது ஒரு புதிய திட்டத்தினைக் கொண்டுவந்துள்ளது.
இதன்மூலம் இரவு நேரங்களில் நடக்கும் பண மோசடிகள் தடுக்கப்படும்.
அதாவது எஸ்பிஐ ஏடிஎம்களில் இரவு நேரத்தில் பணம் எடுக்கும் வகையில் ஒடிபி மூலம் பணத்தை எடுக்கும் முறை அமலுக்கு நேற்று முதல் வந்துள்ளது. அதாவது இரவு 8மணிக்கு பின்னர் எஸ்பிஐ ஏடிஎம் இல் பணம் எடுக்க நினைப்போர் செல்போனில் வரும் ஓடிபி மூலமே பணம் எடுக்க முடியும் என்று எஸ்பிஐ வங்கி தெரிவித்துள்ளது.

மேலும் இந்த முறையானது எஸ்பிஐ வங்கி ஏடிஎம்களுக்கு மட்டுமே பொருந்தும், மற்ற வங்கி கிளை ஏடிஎம்களில் இது நிச்சயம் செயல்படாது என்று கூறப்பட்டுள்ளது.
இந்த ஒடிபி முறையானது இரவு 8மணி முதல் காலை 8மணி வரை மட்டுமே செயல்படக் கூடியதாக இருக்கும். இனி டெபிட் கார்டுகள் மூலம் நடக்கும் மோசடிகள் இதனால் நிச்சயம் குறைய வாய்ப்புள்ளதாக இதன்மூலம் தெரிகிறது.