Apps

இன்டர்நெட் இல்லாமல் பேலன்ஸ் தெரிந்துகொள்ள SBI Quick Missed Call Banking App!!

பொதுவாக பணப்பரிமாற்றும் செய்யும் செயலியானது, இணையதள வசதி இருந்தால் மட்டுமே செயல்படக் கூடியதாக இருக்கும். ஆனால் இதனால் நெட்வொர்க் இல்லாத இடங்களில் இந்த பணப்பரிமாற்ற வசதியினை நம்மால் பயன்படுத்த முடிவதில்லை.

இணையதள வசதி இல்லாத வகையில் உள்ள செயலிகளை எந்தவொரு இடத்திலும்  பயன்படுத்த முடியும். அதாவது இணைய வசதியே இல்லாமல், நமது கணக்கில் உள்ள நிலுவைத் தொகையினைத் தெரிந்துகொள்ளும் ஆப்சனை தற்போது பாரத ஸ்டேட் பாங்க் வழங்கியுள்ளது.

இன்டர்நெட் இல்லாமல் பேலன்ஸ் தெரிந்துகொள்ள SBI Quick Missed Call Banking App!!

அதாவது பாரத ஸ்டேட் வங்கி வழங்கியிருக்கும் இந்த சேவைக்கு SBI Quick – Missed Call Banking என்று பெயர்.

இந்த சேவையின் மூலம் எஸ்பிஐ வங்கி கணக்கில் இருக்கும் இருப்பு தொகை எவ்வளவு என்பதை தெரிந்துகொள்ள முடியும், அதாவது இருப்புத் தொகையினைத் தெரிந்துகொள்ள நாம் 09223766666 என்ற எண்ணுக்கு ஒரே ஒரு மிஸ்ட் கால் கொடுத்தால் போதுமானதாக இருக்கும்.

மேலும் இந்த சேவையினை SBI Quick – Missed Call Banking என்ற ஆப்பைப் பயன்படுத்தி ஆண்ட்ராய்டு மற்றும் iOS தளங்களில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். மேலும் இந்த ஆப் மூலம் நாம் மினி ஸ்டேட்மெண்ட் எனப்படும் நமது அக்கௌண்ட்டின் பணப்பரிமாற்ற விவரங்களையும் தெரிந்து கொள்ளலாம்.

Related posts

இந்தியாவில் 80 சதவீதம் வரை தள்ளுபடிகளை அறிவித்துள்ள பிளிப்கார்ட்!

TechNews Tamil

போன் பேசும்போது தேவையற்ற சத்தத்தைக் குறைக்கும் ஆப்..!!!

TechNews Tamil

அமேசான் கிரேட் இந்தியன் சேல்: போன்களுக்கான தள்ளுபடி விவரம் இதோ!

TechNews Tamil