எஸ்பிஐ வங்கி தற்போது அதன் வாடிக்கையாளர்களுக்கு ஒரு உத்தரவினைப் பிறப்பித்துள்ளது, அதாவது தங்கள் KYC விபரங்களை பதிவிட வேண்டும் என்று கூறியுள்ளது.
மேலும் வாடிக்கையாளர்கள் KYC புதுப்பிக்கப்படாத வங்கிக் கணக்குகள் வங்கியால் முடக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இதுகுறித்த புதுப்பித்தல் விவரங்களை எஸ்பிஐ வங்கி தனது வாடிக்கையாளர்களின் மொபைல் எண்களுக்கு அனுப்பி தகவலை தெரிவித்துள்ளது.
எஸ்பிஐ பிப்ரவரி 28 ஆம் தேதிக்கு முன்னர் எஸ்பிஐ வாடிக்கையாளர்கள், KYC புதுப்பிப்பு விபரங்களை செய்தல் வேண்டும்.

மேலும் எஸ்பிஐ அறிவித்த அறிவிப்பின்படி, 28 ஆம் தேதிக்கு முன்னர் KYC புதுப்பிக்காத வாடிக்கையாளர்களின் கணக்குகள் முடக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த KYC யினை புதுப்பிக்க நேரில் வங்கிகளுக்கு செல்ல வேண்டும். மேலும் வாக்காளரின் அடையாள அட்டை, ஓட்டுனர் உரிமம், ஆதார் அட்டை, MNREGA அட்டை, பான் அட்டை, NPR இன் கடிதம், புகைப்படங்கள் போன்றவை கிடைக்கும்.