Mobile

ஜனவரி 7 ஆம் தேதி வெளியாகவுள்ள சாம்சங்க் நிறுவனத்தின் கேலக்ஸி எம்02எஸ் ஸ்மார்ட்போன்!!

மொபைல்போன் தயாரிப்பு நிறுவனமான சாம்சங் நிறுவனம் ஜனவரி 7 ஆம் கேலக்ஸி எம்02எஸ் ஸ்மார்ட்போனை வெளியிடத் திட்டமிட்டுள்ளது. இந்த கேலக்ஸி எம்02எஸ் ஸ்மார்ட்போன் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.

சாம்சங் கேலக்ஸி எம்02எஸ் ஸ்மார்ட்போன் 6.5 இன்ச் எச்டி பிளஸ் இன்பினிட்டி வி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டதாகவும், மேலும் 1080 பிக்சல்கள் தீர்மானம் கொண்டதாகவும் உள்ளது.

ஜனவரி 7 ஆம் தேதி வெளியாகவுள்ள சாம்சங்க் நிறுவனத்தின் கேலக்ஸி எம்02எஸ் ஸ்மார்ட்போன்!!

இது ஆக்டோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 460 சிப்செட் வசதி கொண்டதாகவும், இயங்குதளத்தினைப் பொறுத்தவரை ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இயங்குவதாகவும் உள்ளது.

மேலும் இந்த சாம்சங் கேலக்ஸி எம்02எஸ் ஸ்மார்ட்போன் ஆனது 3ஜிபிஃ4ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி/64ஜிபி உள்ளடக்க மெமரி வசதியைக் கொண்டதாகவும், மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவைக் கொண்டதாகவும் உள்ளது.

சாம்சங் கேலக்ஸி எம்02எஸ் ஸ்மார்ட்போன் முன்புறத்தில் 13எம்பி செல்பீ கேமராவினைக் கொண்டுள்ளது.

இது 5000 எம்ஏஎச் பேட்டரி கொண்டதாகவும், மேலும் பாதுகாப்பு வசதியினைப் பொறுத்தவரை கைரேகை சென்சார் கொண்டதாகவும் உள்ளது.

மேலும் சாம்சங் கேலக்ஸி எம்02எஸ் ஸ்மார்ட்போன் ஆனது இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை டூயல் 4ஜி வோல்ட்இ, வைஃபை 802.11 ஏசி, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட், 3.5மிமீ ஆடியோ ஜாக் கொண்டதாக உள்ளது.

Related posts

சாம்சங்க் நிறுவனம் வெளியிட்டுள்ள சாம்சங்க் கேலக்ஸி ஏ52 ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil

சீனாவில் அறிமுகமாகியுள்ள ஹானர் பிளே 9ஏ ஸ்மார்ட்போன்!

TechNews Tamil

‘ஐபோன் 11’ இன் அறிமுக தேதி அறிவிப்பு!!

TechNews Tamil