சாம்சங் நிறுவனம் இந்தியாவில் புதிய ஸ்மார்ட் டிவி மாடலை அறிமுகம் செய்துள்ளது. இந்த சாம்சங் ஸ்மார்ட் டிவிக்கான பெயர் #funbelievable என்று பெயர் ஆகும்.
- ஃபன்பிலிவபிள் 32′ இன்ச் சாம்சங் ஸ்மார்ட் டிவியின் இந்திய விலை- ரூ.12,990
இந்த ஸ்மார்ட் டிவியானது மலிவு விலையில் அறிமுகம் ஆகியுள்ளதால் பயனர்கள் மத்தியில் பெரிய அளவில் வரவேற்பினைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த ஸ்மார்ட் டிவி குறித்த விவரங்களை தற்போது பார்க்கலாம்.

இந்த சீரிஸ் மாடல் ஆனது 42′ இன்ச் டிஸ்பிளேவினைக் கொண்டுள்ளது. இந்த புதிய ஃபன்பிலிவபிள் சாம்சங் டிவிக்கள் சாம்சங் ஆன்லைன் ஸ்டோர், சாம்சங் ஆஃப்லைன் ஸ்டோர்களில் விற்பனைக்கு வரும் என்று சாம்சங்க் நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்த புதிய ஸ்மார்ட் டிவியினை சாதாரண பெர்சனல் கம்ப்யூட்டராகப் பயன்படுத்த முடியும், மேலும் இது ப்ரொவ்சிங் செய்யும் வசதிகளையும், மேலும் இன்னபிற கணினி வசதிகளையும் வழங்குகிறது.
மேலும் இதில் பவர்பாயிண்ட், கிளவுட் ஸ்டோரேஜ் போன்றவற்றினையும் பயன்படுத்தும் வகையிலான வசதிகளை சாம்சங் ஸ்மார்ட் டிவி வழங்குகிறது.
நெட்ஃபிக்ஸ், அமேசான் பிரைம் வீடியோ, ஜீ 5, சோனிலிவ் மற்றும் வூட் போன்ற பயன்பாடுகளை எளிதில் பயன்படுத்தும் வகையில் டிவி நிகழ்ச்சிகளைக் கண்டறிய உதவும் உள்ளடக்க வழிகாட்டியினை இந்த ஸ்மார்ட் டிவி கொண்டுள்ளது.