சீனாவில் சாம்சங் நிறுவனம் தற்போது டபிள்யூ 21 5ஜி போல்டபிள் ஸ்மார்ட்போனை நவம்பர் 4 ஆம் தேதி வெளியிட்டு உள்ளது. இந்த சாம்சங் டபிள்யூ 21 5ஜி போல்டபிள் ஸ்மார்ட்போன் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.
சாம்சங் டபிள்யூ 20 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது, ஸ்னாப்டிராகன் 855 SoC க்கு பதிலாக குவால்காம் ஸ்னாப்டிராகன் 855+ SoC மூலம் இயங்கும் தன்மை கொண்டுள்ளது.
இந்த சாம்சங் டபிள்யூ 21 5 ஜி ஸ்மார்ட்போன் 1,768×2,208 பிக்சல்கள் தீர்மானம் கொண்டதாகவும், மேலும் 6.23 இன்ச் 816×2,260 பிக்சல்கள் கவர் டிஸ்ப்ளேவினைக் கொண்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் மெமரி அளவினைப் பொறுத்தவரை 12ஜிபி ரேம் மற்றும் 512ஜிபி உள்ளடக்க மெமரி வசதியினைக் கொண்டுள்ளது. சாம்சங் W21 5G ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 865 பிளஸ் சிப்செட் வசதியினைக் கொண்டுள்ளது.
சாம்சங் டபிள்யூ 21 5ஜி ஸ்மார்ட்போன் கேமராவினைப் பொறுத்தவரை 12 மெகாபிக்சல் சென்சார், 12 மெகாபிக்சல் செல்பீ கேமராவைக் கொண்டுள்ளது.
சாம்சங் W21 5G ஸ்மார்ட்போன் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சாரினைக் கொண்டுள்ளதாக உள்ளது. மேலும் டூயல் செல் பேட்டரி 2,090mAh மற்றும் 2,160mAh கொண்டுள்ளது.