சாம்சங்கில் கடந்த 18ம் தேதி மான்சூன் சேல் என்ற பெயரில் ஆஃபர்கள் அறிவிக்கப்பட்டது. இந்த ஆஃபர் தற்போது முடிவடைந்த நிலையில், குறிப்பிட்ட பொருட்களுக்கு மட்டும் மீண்டும் ஆஃபர்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
சாம்சங்கில் பட்ஜெட் விலைக்கு ஏற்றவாறு, 32 இன்ச் சாதாரண எல்இடி டிவி 21,900
ரூபாயிலிரு்து 14,990
ரூபாயாக
குறைக்கப்பட்டுள்ளது. இதே போல் 28,900 ரூபாய் மதிப்புள்ள 32 இன்ச் ஸ்மார்ட் டிவியின் விலை 20,990
ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
அசல் விலையிருந்து 27 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது.
சாம்சங் வாஷிங் மெஷின், பிரிட்ஜ், மைக்ரோ வேவ் ஒவ்ன், ஏசி ஆகியவற்றுக்கு இந்த சிறப்பு விற்பனையில் அதிகபட்சமாக 31 சதவீதம் வரையில் ஆஃபர்கள்
அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடக்க விலையாக சிங்கிள் டோர் 3 ஸ்டார் பிரிட்ஜ் வெறும் 13,790
ரூபாய்க்கு கிடைக்கிறது.
சாதாரண நாட்களில் இதன் விலை 18,250 ரூபாய். இதற்கு 10 வருட வாரண்டியும் வழங்கப்படுகிறது.
இதே போல் 6.2 கிலோ ஆட்டோமெட்டிக் டாப் லோடு வாஷின் மெஷின்
10,350 ரூபாயாக
உள்ளது. நீண்ட நாட்களாக வாஷிங் மெஷின் வாங்க நினைத்தவர்கள் இந்த ஆஃபரில் சாம்சங்
வாஷிங் மெஷின் வாங்கிக் கொள்ளலாம். 47,100 ரூபாய் மதிப்புள்ள இன்வெர்ட்டர், தற்போது 33,990 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.