Mobile

பிப்ரவரி 25 ஆம் தேதி களமிறங்கவுள்ள கேலக்ஸி எம்31 ஸ்மார்ட்போன்!

சாம்சங் நிறுவனம் பிப்ரவரி 25 ஆம் தேதி புதிய கேலக்ஸி எம்31 ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்துள்ளது.

சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எம்31 ஸ்மார்ட்போன் மாடல் ஆனது ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இயங்கும் தன்மை கொண்டதாக உள்ளது. மேலும் இது, ஆக்டோ-கோர் எக்ஸிநோஸ் 9611 சிப்செட் வசதி கொண்டதாக உள்ளது.

மெமரியினைப் பொறுத்தவரை கேலக்ஸி எம்31 ஸ்மார்ட்போன் 6ஜிபி/ 8ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி/128ஜிபி உள்ளடக்க மெமரி வசதி கொண்டுள்ளது.

மேலும் இந்த ஸ்மார்ட்போன் கேமராவைப் பொறுத்தவரை பின்புறத்தில் 64எம்பி பிரைமரி சென்சார், 8எம்பி செகன்டரி சென்சார், 5எம்பி டெப்த் சென்சார், 5எம்பி டெப்த் சென்சார் போன்றவற்றினைக் கொண்டுள்ளது. மேலும் இது முன்புறத்தில் 32எம்பி செல்பீ கேமராவினைக் கொண்டுள்ளது.

பிப்ரவரி 25 ஆம் தேதி களமிறங்கவுள்ள கேலக்ஸி எம்31 ஸ்மார்ட்போன்!

மேலும் இந்த சாம்சங் கேலக்ஸி எம்31 ஸ்மார்ட்போன் 6.5 இன்ச் டிஸ்பிளேவினைக் கொண்டுள்ளது, இது 1080 பிக்சல்கள் தீர்மானம் கொண்டதாக உள்ளது.

மேலும் இந்த ஸ்மார்ட்போன் 6000எம்ஏஎச் பேட்டரி கொண்டு சக்தியூட்டுவதாய் உள்ளது. இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை இந்த ஸ்மார்ட்போன் வைஃபை,ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் போன்றவற்றினைக் கொண்டுள்ளது.

Related posts

வியட்நாமில் 5000 எம்ஏஎச் பேட்டரியுடன் களமிறங்கிய ரியல்மி சி20!

TechNews Tamil

கேமிங் பிரியர்களுக்காக வரவுள்ள நுபியா ரெட் மேஜிக் 3S.!!

TechNews Tamil

விரைவில் களம் இறங்க ரெடியாகிவரும் சாம்சங் கேலக்ஸி ஏ12!

TechNews Tamil