சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி நோட் 10 ஸ்மார்ட்போன் சமீபத்தில் அறிமுகம் ஆனது.
1. கேலக்ஸி நோட் 10 லைட் 106ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட ஸ்மார்ட்போன் விலை- ரூ.38,999
2. – கேலக்ஸி நோட் 10 லைட் 8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட ஸ்மார்ட்போன் விலை- ரூ.40,999
இந்த ஸ்மார்ட்போன் அடுத்த வாரம் அமேசான் மற்றும் பிளிப்கார்ட் வலைதளத்தில் விற்பனைக்கு வரவுள்ளது.

இந்த ஸ்மார்ட்போனுக்கு தற்போது வாடிக்கையாளகளைக் கவரும் வகையிலான அறிமுக சலுகைகளை அறிவித்துள்ளது, அதாவது ரூ.5000 வரை அப்கிரேட் ஆபர் வழங்கப்பட்டுள்ளது.
எக்சேஞ்ச் ஆஃபரில் பழைய சாம்சங் கேலக்ஸி நோட் ஸ்மார்ட்போனுக்கு ரூ.5000 தள்ளுபடி கிடைக்கும்.
தற்போது கேலக்ஸி நோட் 10 லைட் ஸ்மார்ட்போனின் விலையானது தற்போது வரை வெளியாகவில்லை. இதன் விலை விவரமானது அடுத்த வாரம் ஜனவரி 7 ஆம் தேதியன்று வெளியாகும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த ஸ்மார்ட்போன் 6.7 இன்ச் முழு எச்டி பிளஸ் டிஸ்பிளேவினைக் கொண்டுள்ளது. மேலும் இது 1080 x 2400 பிக்சல்கள் தீர்மானம் கொண்டதாக உள்ளது.
மேலும் மெமரியினைப் பொறுத்தவரை 6ஜிபி/8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள்ளடக்க மெமரி கொண்டுள்ளது.
இது 10nmஆக்டா கோர் ப்ராசஸர் கொண்டு இயங்கும் தன்மையானது.
கேமராவைப் பொறுத்தவரை பின்புறத்தில் 12எம்பி வைடு ஆங்கிள் லென்ஸ், 12எம்பி டூயல் பிக்சல் ஆட்டோஃபோகஸ் லென்ஸ், 12எம்பி டெலிபோட்டோ லென்ஸ் போன்றவற்றினைக் கொண்டுள்ளது.
மேலும் முன்புறத்தில் 32எம்பி செல்பீ கேமரா வசதி கொண்டதாக உள்ளது.
இது 4500எம்ஏஎச் பேட்டரி கொண்டு சக்தியூட்டக் கூடியதாக உள்ளது. மேலும் இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை வைஃபை, ஜிபிஎஸ், என்எப்சி,மைக்ரோ யுஎஸ்பி போர்ட், 3.5எம்எம் ஆடியோ ஜாக் போன்றவற்றினைக் கொண்டுள்ளது.