கொரோனா வைரஸால் உலகம் முழுவதும் உள்ள மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டோருக்கு மருத்துவர்கள், செவிலியர்கள், ஆகியோர் மிகவும் சிறப்பான பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இவர்களுக்கு பொதுமக்கள் ஆதரவினை வழங்கி வருவதோடு நன்றியினையும் தெரிவித்து வருகின்றனர். இவர்களுக்கு ஆதரவு அளிக்கும் நோக்கத்தில் இலவசமாக தொலைபேசி பழுதுபார்க்கும் வசதியினை வழங்க உள்ளதாக சாம்சங், கூகுள் கூறியுள்ளது.
தொலைபேசி பழுதுபார்க்கும் நிறுவனமான uBreakiFix உடன் இணைந்து சாம்சங், கூகுள் நிறுவனங்கள் இந்த முடிவினை எடுத்துள்ளதாகத் தெரிகின்றது.

இந்த இலவச தொலைபேசி பழுதுபார்க்கும் சேவையினைப் பெற தங்கள் கேலக்ஸி தொலைபேசியில் காண்பிக்கப்படும் uBreakiFix மூலம் தொடர்பு கொள்ள வேண்டும்.
அதேபோல் சாம்சங்க் நிறுவனம் சாம்சங்கின் இணையதளத்தில் மொபைல்களை வாங்கும் மருத்துவர்கள், செவிலியர்கள், ஆகியோருக்கு 30சதவிகிதம் வரை தள்ளுபடியினை அளிக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
அதாவது ஸ்கிரீனில் ஏற்படும் பிரச்சினைகள், பேட்டரி ரீதியான பிரச்சினைகள், போன்ற அனைத்து இலவச பழுதுபார்ப்பு சேவைகலையும் ஜூன் 30 ஆம் தேதி வரை வழங்கவுள்ளதாகவும் அறிவித்துள்ளது.
உண்மையில் இது மருத்துவர்கள், செவிலியர்கள் போன்றோருக்கு ஆதரவு தரும் சேவை என்று பலரும் பாராட்டி வருகின்றனர்.