Mobile

சாம்சங் நிறுவனத்தின் சாம்சங் கேலக்ஸி எம்12 ஸ்மார்ட்போன் வெளியீடு!

மொபைல்போன் தயாரிப்பு நிறுவனமான சாம்சங் நிறுவனம் தற்போது சாம்சங் கேலக்ஸி எம் 12 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. இந்த சாம்சங் கேலக்ஸி எம் 12 ஸ்மார்ட்போன் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.

சாம்சங் கேலக்ஸி எம்12 ஸ்மார்ட்போன் 6.5 இன்ச் எச்டி ப்ளஸ் இன்ஃபினிட்டி-வி டிஸ்ப்ளே மற்றும் 1600 x 720 பிக்சல்கள் திரை தெளிவுத்திறன் மற்றும் பஞ்ச் ஹோல் வடிவமைப்பினைக் கொண்டுள்ளது.

பாதுகாப்பு அம்சத்தினைப் பொறுத்தவரையில் பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை சென்சார் கொண்டதாக உள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் 2 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டோகோர் செயலி மூலம் இயங்குவதாகவும், மேலும் எக்ஸினோஸ் 850 செயலி மூலம் இயங்குவதாகவும் உள்ளது.

இயங்குதளத்தினைப் பொறுத்தவரை ஆண்ட்ராய்டு 11 ஆதரவை கொண்டுள்ளது. கேமராவினைப் பொறுத்தவரை இது 48 மெகாபிக்சல் முதன்மை கேமரா, 5 மெகாபிக்சல் இரண்டாம் நிலை கேமரா, இரட்டை 2 மெகாபிக்சல் கேமரா முன்பக்கத்தில் 8 மெகாபிக்சல் செல்பி கேமரா கொண்டுள்ளது.

சாம்சங் கேலக்ஸி எம் 12 ஸ்மார்ட்போன் பேட்டரி அளவினைப் பொறுத்தவரை 6000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 15 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவினைக் கொண்டுள்ளது.

Related posts

சீனாவில் அறிமுகமானது விவோ Y20 ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil

ஜனவரி 7 ஆம் தேதி களமிறங்கும் ரியல்மி எக்ஸ்50!!

TechNews Tamil

அசர வைக்கும் அம்சங்களுடன் சீனாவில் அறிமுகமாகியுள்ள ரெட்மி 9ஐ ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil