Mobile

சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எக்ஸ்கவர் 5 ஸ்மார்ட்போன் வெளியீடு!

மொபைல்போன் தயாரிப்பு நிறுவனமான சாம்சங் நிறுவனம் தற்போது கேலக்ஸி எக்ஸ்கவர் 5 ஸ்மார்ட்போனை ஐரோப்பாவில் வெளியிட்டுள்ளது. இந்த கேலக்ஸி எக்ஸ்கவர் 5 ஸ்மார்ட்போன் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.

சாம்சங் கேலக்ஸி எக்ஸ்கவர் 5 ஸ்மார்ட்போன் 5.3 இன்ச் எச்டி பிளஸ் எல்சிடி டிஸ்பிளே, 1480×720 பிக்சல் தீர்மானம் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 6 ஆதரவினைக் கொண்டதாக உள்ளது.

சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எக்ஸ்கவர் 5 ஸ்மார்ட்போன் வெளியீடு!

இந்த சாம்சங் கேலக்ஸி எக்ஸ்கவர் 5 ஸ்மார்ட்போன் எக்ஸிநோஸ் 850 ஆக்டோ-கோர் பிராசஸர் வசதி கொண்டதாகவும் உள்ளது.

இயங்குதளத்தினைப் பொறுத்தவரையில் ஆண்ட்ராய்டு 11 மற்றும் சாம்சங் ஒன் யுஐ 3.1 இயங்குதளம் கொண்டு இயங்குவதாக உள்ளது.

சாம்சங் கேலக்ஸி எக்ஸ்கவர் 5 ஸ்மார்ட்போன் கேமராவினைப் பொறுத்தவரை 16எம்பி ரியர் கேமரா மற்றும் 5எம்பி செல்பீ கேமராவினைக் கொண்டதாக உள்ளது.

பாதுகாப்பு அம்சத்தினைப் பொறுத்தவரை வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட் வசதியினைக் கொண்டதாக உள்ளது.

பேட்டரி அளவு எனக் கொண்டால் 3000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 15 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவினைக் கொண்டதாக உள்ளது. இணைப்பு ஆதரவு எனக் கொண்டால் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5, யுஎஸ்பி டைப் சி போன்றவற்றினைக் கொண்டதாக உள்ளது.

Related posts

விற்பனையைத் துவக்கிய விவோ வை19 ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil

அடுத்த வாரம் அறிமுகம் ஆகவுள்ள Vivo Y91C 2020 ஸ்மார்ட்போன்!

TechNews Tamil

அதிரடியாக அறிமுகமானது ரெட்மி 8ஏ ஸ்மார்ட்போன்.!

TechNews Tamil