Mobile

சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எம்12 ஸ்மார்ட்போன் வெளியீடு!

மொபைல்போன் தயாரிப்பு நிறுவனமான சாம்சங் நிறுவனம் தற்போது கேலக்ஸி எம்12 ஸ்மார்ட்போனை வியட்நாமில் வெளியிட்டுள்ளது. இந்த கேலக்ஸி எம்12 ஸ்மார்ட்போன் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.

சாம்சங் கேலக்ஸி எம்12 ஸ்மார்ட்போன் ஆனது 6.5 இன்ச் எச்டி பிளஸ் டிஎப்டி இன்பினிட்டி வி டிஸ்பிளே மற்றும் 720×1,600 பிக்சல் தீர்மானம் கொண்டுள்ளது.

மேலும் இந்த ஸ்மார்ட்போன் ஆனது ஆக்டோ-கோர் எக்ஸிநோஸ் 850 எஸ்ஒசி சிப்செட் வசதி கொண்டுள்ளது.

சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி எம்12 ஸ்மார்ட்போன் வெளியீடு!

இயங்குதளத்தினைப் பொறுத்தவரை இது சாம்சங் கேலக்ஸி எம்12 ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு (One UI Core) இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இயங்குவதாக உள்ளது.

கேமராவினைப் பொறுத்தவரை சாம்சங் கேலக்ஸி எம்12 ஸ்மார்ட்போன் பின்புறத்தில் 48எம்பி பிரைமரி சென்சார், 5எம்பி செகன்டரி சென்சார், 2எம்பி மேக்ரோ சென்சார், 2எம்பி டெப்த் சென்சார் போன்றவற்றினையும் முன்புறத்தில் 8எம்பி செல்பீ கேமராவினையும் கொண்டுள்ளது.

மேலும் இது மெமரி அளவினைப் பொறுத்தவரை 4ஜிபி/6ஜிபி ரேம் வசதி மற்றம் 32ஜிபி/64ஜிபி உள்ளடக்க மெமரி வசதி கொண்டுள்ளது. மேலும் கூடுதலாக மெமரி நீட்டிப்பு ஆதரவினைக் கொண்டுள்ளது.

பேட்டரி அளவினைப் பொறுத்தவரை 6000 எம்ஏஎச் பேட்டரி கொண்டதாகவும், பாஸ்ட் சார்ஜிங் ஆதரவைக் கொண்டுள்ளது.

இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை வைஃபை, ஜிபிஎஸ் போன்றவற்றினைக் கொண்டுள்ளது.

Related posts

புதிய அப்டேட் பெற்றுள்ள கேலக்ஸி எஸ்10 லைட் ஸ்மார்ட்போன்!

TechNews Tamil

அறிமுகமானது ஓப்போ ஃபைண்ட் எக்ஸ் 2 நியோ ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil

மைக்ரோசாப்ட் வெளியிட்டுள்ள சர்பேஸ் டுயோ 2 ஸ்மார்ட்போன் வெளியீடு!

TechNews Tamil