Gadgets

சாம்சங் நிறுவனம் ஐரோப்பியாவில் வெளியிட்டுள்ள கேலக்ஸி க்ரோம்புக் 2 லேப்டாப்!

சாம்சங் நிறுவனம் கேலக்ஸி க்ரோம்புக் 2 லேப்டாப் மாடலினை ஐரோப்பாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த கேலக்ஸி க்ரோம்புக் 2 லேப்டாப் மாடல் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.

சாம்சங் கேலக்ஸி க்ரோம்புக் 2 மாடல் ஆனது 13.3 இன்ச் QLED FHD டச் ஸ்கிரீன் டிஸ்பிளேவினைக் கொண்டதாகவும், மேலும் 1920 x 1080 பிக்சல்கள் தீர்மானம் கொண்டதாகவும் உள்ளது.

மேலும் இந்த லேப்டாப் மாடல் 10 வது தலைமுறை இன்டெல் கோர் i3-10110U பிராசஸர் வசதியினைக் கொண்டதாகவும் Celeron 5205U பிராசஸர் வசதியினைக் கொண்டதாகவும் உள்ளது.

சாம்சங் நிறுவனம் ஐரோப்பியாவில் வெளியிட்டுள்ள கேலக்ஸி க்ரோம்புக் 2 லேப்டாப்!

சாம்சங் கேலக்ஸி க்ரோம்புக் 2 மாடல் ஆனது 4ஜிபி/6ஜிபி ரேம் வசதி கொண்டதாகவும் 64ஜிபி/128ஜபி எஸ்எஸ்டி ஸ்டோரேஜ் வசதியை அடிப்படையாகக் கொண்டதாகவும் உள்ளது.

மேலும் இது 2 x 5W stereo ஸ்டீரியோ ஸ்பீக்கர் கொண்டதாகவும், பேக்லைட் கீபோர்டு வசதி கொண்டதாகவும் உள்ளது.

சாம்சங் கேலக்ஸி க்ரோம்புக் 2 மாடல் ChromeOS கொண்டு இயங்கும் தன்மை கொண்டதாகவும், பேட்டரி அளவினைப் பொறுத்தவரை 45.5Wh பேட்டரி கொண்டதாக உள்ளது.

இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை வைஃபை 6 ஆதரவைக் கொண்டுள்ளது. பின்பு இரண்டு யூ.எஸ்.பி டைப்-சி போர்ட்கள், மைக்ரோ எஸ்.டி கார்டு ஸ்லாட் மற்றும் புளூடூத் 5.0 போன்றவற்றினைக் கொண்டதாக உள்ளது.

Related posts

சோனி நிறுவனத்தின் ரியோன் பாக்கெட் ஏ.சி.!!

TechNews Tamil

இந்தியாவில் வெளியானது லெனோவோ நிறுவனத்தின் லெனோவோ யோகா 6 லேப்டாப்!!

TechNews Tamil

வெறும் ரூ.10,499/-க்கு கிடைக்கும் RCA ஸ்மார்ட் டிவி!

TechNews Tamil