சாம்சங் நிறுவனம் தற்போது கேலக்ஸி வாட்ச் 3 மற்றும் கேலக்ஸி பட்ஸ் லைவ் இரண்டையும் ஒரே நேரத்தில் வெளியாகி உள்ளது.
இப்போது சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி பட்ஸ் லைவ் ட்ரூ வயர்லெஸ் இயர்போன் குறித்து இப்போது பார்க்கலாம். அதாவது கேலக்ஸி பட்ஸ் லைவ் ட்ரூ வயர்லெஸ் இயர்போன் ஆனது ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன், ப்ளூடூத் 5 மற்றும் ஐபிஎக்ஸ்2 ஸ்வெட் ரெசிஸ்டண்ட் வசதி போன்ற வசதிகளைக் கொண்டுள்ளது.
மேலும் இது 29 மணி நேர பேட்டரி பேக்கப் மற்றும் கியூஐ வயர்லெஸ் சார்ஜிங் வசதி கொண்டதாகவும் உள்ளது.

அடுத்து சாம்சங் கேலக்ஸி வாட்ச் 3 மாடல் குறித்துப் பார்க்கலாம், இந்த வாட்ச் எம்ஐஎல்-எஸ்டிடி-810ஜி சான்று, ஐபி68 தர வாட்டர் ரெசிஸ்டண்ட், எல்டிஇ போன்ற வசதிகளைக் கொண்டுள்ளது.
மேலும் இது டைசன் சார்ந்த வியரபிள் ஒஎஸ் 5.5 மற்றும் சூப்பர் AMOLED டிஸ்ப்ளேவினைக் கொண்டுள்ளது. மேலும் ஜெஸ்ட்யூர் கண்ட்ரோல் மற்றும் பிக்ஸ்பி வாய்ஸ் அசிஸ்டண்ட் வசதி கொண்டதாகவும் உள்ளது..
இந்த கேலக்ஸி வாட்ச் 3 ஆனது 41எம்எம் மற்றும் 45எம்எம் என இரண்டு அளவுகளில் வெளியாகியுள்ளது.