Mobile

சாம்சங் நிறுவனம் அறிமுகம் செய்துள்ள Samsung கேலக்ஸி S20 FE!!

மொபைல் போன் தயாரிப்பு நிறுவனமான சாம்சங் நிறுவனம் சாம்சங் கேலக்ஸி S20 FE என்ற ஸ்மார்ட்போனை வெளியிட்டு உள்ளது. இந்த புதிய கேலக்ஸி S20 FE ஸ்மார்ட்போன் குறித்து இப்போது பார்க்கலாம்.

சாம்சங் கேலக்ஸி S20 FE ஸ்மார்ட்போன் ஆனது,  6.5′ இன்ச் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளேவினைக் கொண்டுள்ளது. மேலும் 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்துடன் எஃப்.எச்.டி பிளஸ் ரெசல்யூஷன் டிஸ்பிளேவினைக் கொண்டுள்ளது.

மேலும் இது 2400 x 1080p தீர்மானத்தினைக் கொண்டுள்ளது, இந்த ஸ்மார்ட்போன் ஆனது இன்பினிட்டி O பஞ்ச்-ஹோல் டிஸ்பிளேயுடன் 2.5D கர்வுடு டெம்பர் கிளாஸால் பாதுகாப்பினைக் கொண்டுள்ளது.

சாம்சங் நிறுவனம் அறிமுகம் செய்துள்ள Samsung கேலக்ஸி S20 FE!!

சாம்சங் கேலக்ஸி S20 FE ஸ்மார்ட்போன் ஆனது, குவால்காம் ஸ்னாப்டிராகன் 865 அல்லது எக்ஸினோஸ் 990 SoC ஐ அடிப்படையாகக் கொண்டதாக உள்ளது.

மேலும் Android 10 OS உடன் கூடிய ஒன் UI 2.0 ஸ்மார்ட்போன்கள் கொண்டுள்ளது, மெமரி அளவினைப் பொறுத்தவரை 6 ஜிபி ரேம் மற்றும் மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட்டுடன் 128 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் வழங்குகின்றது.

இது Android 10 OS உடன் கூடிய ஒன் UI 2.0 ஸ்கின் இல் இயங்குதளம் கொண்டதாக உள்ளது.

கேமராவினைப் பொறுத்தவரை சாம்சங் கேலக்ஸி S20 FE OIS, 12MP அதி வைட் ஆங்கிள் லென்ஸ், மற்றும் OIS 8MP 3x ஆப்டிகல் ஜூம் திறன் டெலிஃபோட்டோ லென்ஸ், 12MP வைட் ஆங்கிள் லென்ஸ் உடன் ட்ரிபிள் கேமரா அமைப்பை கொண்டதாகவும், முன்பக்கத்தில், சாதனம் 32 எம்.பி செல்பி கேமராவைக் கொண்டுள்ளது.

பேட்டரி அளவினைப் பொறுத்தவரை சாம்சங் கேலக்ஸி S20 FE ஸ்மார்ட்போன் 4,500 எம்ஏஎச் பேட்டரியினைக் கொண்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் கிளவுட் ரெட், கிளவுட் ஆரஞ்சு, கிளவுட் லாவெண்டர், கிளவுட் மிண்ட், கிளவுட் நேவி மற்றும் கிளவுட் ஒயிட் போன்ற போன்ற வண்ணங்களைக் கொண்டுள்ளது.

Related posts

இந்தியாவில் அறிமுகமானது சாம்சங் கேலக்ஸி எம்31 பிரைம் ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil

மலிவு விலையில் வரவுள்ள Huawei Enjoy 10S!

TechNews Tamil

ரூ.1,334 என்ற மாதத் தவணையில் போக்கோ எக்ஸ்2 ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil