சாம்சங் நிறுவனம் இந்தியாவில் கேலக்ஸி பிட் 2 பெயரில் பிட்னஸ் பேண்ட் மாடலை வெளியிட்டுள்ளது. இந்த சாம்சங் கேலக்ஸி பிட் 2 சிறப்பம்சங்கள் குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.
இந்த சாம்சங் கேலக்ஸி பிட் 2 மாடல் 1.1 இன்ச் 126×294 AMOLED டிஸ்ப்ளேவினைக் கொண்டுள்ளதும் மேலும் மெமரி அளவினைப் பொறுத்தவரையில் 2 எம்பி ரேம், 32 எம்பி மெமரி கொண்டுள்ளது.
மேலும் பிளாஸ்டிக் ஸ்டிராப் வசதியினைக் கொண்டதாகவும், மேலும் இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை ப்ளூடூத் கொண்டுள்ளது, மேலும் இது ஆக்டிவிட்டி மற்றும் ஸ்லீப் டிராக்கிங் கொண்டுள்ளது.

மேலும் பாதுகாப்பு அம்சமாக 5ஏடிஎம் மற்றும் ஐபி68 வாட்டர் ரெசிஸ்டண்ட் கொண்டதாக உள்ளது, பேட்டரி அளவினைப் பொறுத்தவரை 159 எம்ஏஹெச் பேட்டரி கொண்டுள்ளது.
கேலக்ஸி பிட்2 மாடல் பிளாக் மற்றும் ரெட் என இரண்டு நிறங்களில் கிடைக்கிறது. மேலும் இது அமேசான் ஆன்லைன் விற்பனை தளத்தில் விற்பனைக்கு வரவுள்ளது.
மற்றும் தேர்வு செய்யப்பட்ட ஆப்லைன் விற்பனை மையங்களில் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.