சாம்சங் நிறுவனம் தற்போது கேலக்ஸி ஏ02எஸ் என்ற ஸ்மார்ட்போனை ஐரோப்பாவில் அறிமுகம் செய்துள்ளது.
சாம்சங் கேலக்ஸி ஏ02எஸ் ஸ்மார்ட்போன் ஆனது 6.5 இன்ச் எச்டி பிளஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, மேலும் இந்த ஸ்மார்ட்போன் ஆனது 1.8ஜிகாஹெர்ட் ஆக்டோ-கோர் சிப்செட் வசதி கொண்டுள்ளது.
மேலும் 5000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 15 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவைக் கொண்டுள்ளது. மேலும் சாம்சங் கேலக்ஸி ஏ02எஸ் ஸ்மார்ட்போன் பின்புறத்தில் 13எம்பி பிரைமரி சென்சார், 2எம்பி மேக்ரோ லென்ஸ், 2எம்பி டெப்த் சென்சார் போன்றவற்றினையும் 5எம்பி செல்பீ கேமராவினையும் கொண்டுள்ளது.

மேலும் இது எல்இடி பிளாஸ் போன்ற ஆதரவினைக் கொண்டதாகவும் உள்ளது, மெமரி அளவினைப் பொறுத்தவரையில் 3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி மெமரி கொண்டதாக உள்ளது.
மேலும் இந்த ஸ்மார்ட்போன் கருப்பு, வெள்ளை நிறங்களில் வெளியாகியுள்ளது.