உலக நாடுகள் அனைத்திலும் குடிபுகுந்துள்ள கொரோனா வைரஸிற்கு தற்போதுவரை எந்தவிதமான மருந்துகளும் கண்டுபிடிக்கப்படவில்லை. கொரோனா வைரஸில் இருந்து நம்மைத் தற்காத்துக் கொள்வதே தற்போதைக்கு நம்மிடம் இருக்கும் தீர்வாகும்.
இதனாலேயே தற்காப்பு நடவடிக்கையாக ஊரடங்கானது அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கால் பெரிய அளவில் பொருளாதார இழப்பு ஏற்பட்டாலும், இது ஒன்றே கொரோனாவில் இருந்து தற்காத்துக் கொள்ளும் வழிமுறை என்று கருதி இந்த நடவடிக்கையானது எடுக்கப்பட்டுள்ளது.
அத்தியாவசிய தேவைகளுக்காக வெளியே செல்வோரும், மாஸ்க் அணிந்து செல்ல வேண்டும், அதேநேரம் உள்ளே நுழைந்ததும் 20 நிமிடங்கள் கையினை சானிட்டசைர் கொண்டு கழுவ வேண்டும்.

கை கழுவுவதை நினைவூட்டும் வகையில் சாம்சங்க் நிறுவனமானது தற்போது ஹேண்ட் வாஷ் என்ற செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது.
சாம்சங் ரிசர்ச் இன்ஸ்டிடியூட் ஆனது இந்த ஹேண்ட் வாஷ் செயலியை உருவாக்கியுள்ளது. இந்த செயலியானது சாம்சங்கின் கேலக்ஸி வாட்சில் பயன்பாட்டில் உள்ளது.
இந்த செயலி, பயனர்கள் கை கழுவும் நேரத்தைக் கண்காணித்து, எவ்வளவு விநாடிகள் கை கழுவினார் என்றும், மேலும் கை கழுவும் முறையினை எந்த அளவினை சரியாக செய்தார் என்பது குறித்த தகவல்களையும் வழங்குகிறது. இந்த செயலி உண்மையில் இப்போது மிகவும் தேவையான செயலி என மத்திய அரசு பாராட்டுத் தெரிவித்துள்ளது.