சாம்சங் நிறுவனம் கேலக்ஸி இசட் பிளிப் ஸ்மார்ட்போனை சமீபத்தில் அறிமுகம் செய்தது. தற்போது இந்த கேலக்ஸி இசட் பிளிப் ஸ்மார்ட்போன் நாளை முதல் அதன் இந்திய விற்பனையினைத் துவக்குகிறது.
சாம்சங் நிறுவனம் கேலக்ஸி இசட் பிளிப் ஸ்மார்ட்போனின் விலை- ரூ.1,09,999
சாம்சங் கேலக்ஸி இசட் பிளிப் ஸ்மார்ட்போன் ஆனது இரண்டு டிஸ்பிளேவினைக் கொண்டு உள்ளது, அதாவது வெளிப்புறத்தில் 300×116பிக்சல்கள் தீர்மானத்துடன் 1.06 இன்ச் AMOLED டிஸ்பிளேவினையும், உள்புறத்தில் 2636×1080பிக்சல்கள் தீர்மானத்துடன் 6.7 இன்ச் டைனமிக் AMOLED டிஸ்பிளேவினையும் கொண்டுள்ளது.

மேலும் இந்த ஸ்மார்ட்போன் முன்புறத்தில் 10எம்பி செல்பீ கேமராவினைக் கொண்டுள்ளது, மேலும் பின்புறத்தில், 12எம்பி பிரைமரி லென்ஸ், 12எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் போன்றவற்றினைக் கொண்டுள்ளது.
இந்த ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 855பிளஸ் 7என்எம் பிராசஸர், குவால்காம் ஆதரவைக் கொண்டுள்ளது, மேலும் இது ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் தன்மை கொண்டதாக உள்ளது.
மெமரியினைப் பொறுத்தவரை சாம்சங் கேலக்ஸி இசட் ஸ்மார்ட்போன் 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி உள்ளடக்க மெமரி வசதி கொண்டுள்ளது. மேலும் இது கூடுதல் மெமரி நீட்டிப்பு வசதி கொண்டுள்ளது.
பேட்டரியினைப் பொறுத்தவரை சாம்சங் கேலக்ஸி இசட் பிளிப் ஸ்மார்ட்போன் 3300எம்ஏஎச் இரட்டை பேட்டரி வசதி கொண்டதாக உள்ளது.
இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை இந்த ஸ்மார்ட்போன் 4ஜி எல்டிஇ ஆதரவு,புளூடூத் 5.0, இ-சிம் வசதி, யுஎஸ்பி டைப்-சி வசதி, வைஃபை 802.11a/b/g/n/ac, ஸ்மார்ட் வியூ,ஜி.பி.எஸ். க்ளோனாஸ், பீடோ, கலிலியோ போன்ற வசதிகளை கொண்டுள்ளது