Mobile

புதிய நிறத்தில் விற்பனைக்கு வந்துள்ள சாம்சங் கேலக்ஸி இசட் பிளஸ்

சாம்சங் நிறுவனம் கேலக்ஸி இசட் ஃபிளிப் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனினை இந்தியாவில் சமீபத்தில் அறிமுகம் செய்தது.

கேலக்ஸி இசட் பிளஸ் ஸ்மார்ட்போன் ஏற்கனவே மிரர் பிளாக் மற்றும் மிரர் பர்ப்பிள் போன்ற நிறங்களில் மட்டும் விற்பனையாகி வந்தது, தற்போது இந்த ஸ்மார்ட்போன் மிரர் கோல்டு எனும் புதிய நிறத்தில் விற்பனை செய்யப்படுகிறது.

1.         கேலக்ஸி இசட் ஃபிளிப் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனின் விலை- ரூ. 1,09,999

இந்த ஸ்மார்ட்போன் மார்ச் 17 ஆம் தேதி அமேசான் தளத்தில் விற்பனைக்கு வரவுள்ளது.

மேலும் இந்த கேலக்ஸி இசட் ஃபிளிப் ஸ்மார்ட்போன் 6.7 இன்ச் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் டைனமிக் AMOLED 2636×1080 பிக்சல் ரெசல்யூஷன் கொண்ட டிஸ்ப்ளேவினைக் கொண்டுள்ளது.

புதிய நிறத்தில் விற்பனைக்கு வந்துள்ள சாம்சங் கேலக்ஸி இசட் பிளஸ்

வெளி்ப்புறத்தில் இந்த ஸ்மார்ட்போன் 1.1 இன்ச் சூப்பர் AMOLED டிஸ்ப்ளே 300×112 ரெசல்யூஷனைக் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் கவர் டிஸ்ப்ளே மோட்டோரோலா ரேசர் மாடலைக் கொண்டுள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 855 பிளஸ் ஆக்டா கோர் பிராசஸர் வசதி கொண்டுள்ளது. மேலும் மெமரியினைப் பொறுத்தவரை இந்த ஸ்மார்ட்போன், 8 ஜி.பி. ரேம், 256 ஜி.பி. மெமரி வசதி கொண்டுள்ளது.

கேமராவைப் பொறுத்தவரை 12 எம்.பி. வைடு ஆங்கில் கேமரா, 12 எம்.பி. அல்ட்ரா வைடு ஆங்கில் கேமராவினைக் கொண்டுள்ளது. முன்புறத்தில் இந்த ஸ்மார்ட்போன் 10 எம்.பி. செல்ஃபி கேமராவினைக்  கொண்டுள்ளது.

பாதுகாப்பு அம்சத்தினைப் பொறுத்தவரை கைரேகை சென்சார் கொண்டுள்ளது. மேலும் இது 3300 எம்.ஏ.ஹெச். பேட்டரி கொண்டு சக்தியூட்டுவதாய் உள்ளது.

Related posts

அசத்தலான அம்சங்களுடன் மோட்டோரோலா 75 இன்ச் ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு டிவி!!!

TechNews Tamil

ரூ. 2000 வரை விலை குறைக்கப்பட்ட ரெட்மி கே20 ஸ்மார்ட்போன்!

TechNews Tamil

விரைவில் களமிறங்கவுள்ள அசுஸ் ரோக் போன் 5 ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil