சாம்சங் நிறுவனம் தற்போது கேலக்ஸி இசட் ப்ளிப் 5ஜி ஸ்மார்ட்போன் சீனாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த கேலக்ஸி இசட் ப்ளிப் 5ஜி ஸ்மார்ட்போன் குறித்த அம்சங்களை இப்போது பார்க்கலாம்.
சாம்சங் கேலக்ஸி ப்ளிப் 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 6.7 இன்ச் ஃபுல் ஹெச்டி பிளஸ் 2636×1080 பிக்சல் டைனமிக் AMOLED இன்பினிட்டி பிளெக்ஸ் டிஸ்ப்ளேவினைக் கொண்டுள்ளது.

மேலும் இது 1.1 இன்ச் சூப்பர் AMOLED டிஸ்ப்ளேவினைக் கொண்டுள்ளது, மேலும் ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 865 பிளஸ் பிராசஸர் வசதியினைக் கொண்டதாகவும், மேலும் அட்ரினோ 650 ஜிபியு வசதியினையும் கொண்டுள்ளது.
மெமரி அளவினைப் பொறுத்தவரை 8 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி கொண்டதாகவும் கேமராவினைப் பொறுத்தவரை 12 எம்பி பிரைமரி கேமரா, 12 எம்பி அல்ட்ரா வைடு கேமரா, 10 எம்பி செல்ஃபி கேமரா போன்றவற்றினைக் கொண்டுள்ளது.
இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை 5ஜி, 4ஜி, வைபை, ப்ளூடூத், யுஎஸ்பி டைப் சிகொண்டதாகவும், மேலும் 3300 எம்ஏஹெச் பேட்டரி கொண்டு சக்தியூட்டுவதாக உள்ளது.