சாம்சங் நிறுவனம் நாளை முதல் Samsung Galaxy Watch Active 2, Galaxy Watch 4G ஆகிய அனைத்தும் விற்பனைக்கு வரும் என்று தெரிவித்துள்ளது.
- Samsung Galaxy Watch LTE இன் விலை (42mm) – ரூ. 28,490
- Samsung Galaxy Watch LTE இன் விலை (46mm) – ரூ. 30,990
- Samsung Galaxy Watch Active 2 இன் விலை (aluminium body model ) – ரூ.26,990
- Samsung Galaxy Watch Active 2 இன் விலை (stainless-steel body model)- ரூ. 31,990
Samsung Galaxy Watch 4G :
46mm வகையினைப் பொறுத்தவரை 360×360 பிக்சல்கள் கொண்ட வாட்சானது 1.3 இஞ்ச் சூப்பர் AMOLED display கொண்டுள்ளது.
42mm வகையினைப் பொறுத்தவரை 360×360 பிக்சல்கள் கொண்ட வாட்சானது 1.2 இஞ்ச் சூப்பர் AMOLED display கொண்டுள்ளது.

இது dual-core Samsung Exynos 9110 SoC கொண்டு இயங்கக்கூடியதாக உள்ளது.
1.5 ஜிபி ரேம் மற்றும் 4 ஜிபி உள்ளடக்க சேமிப்பு அளவினைக் கொண்டுள்ளது. 3G/LTE, Bluetooth v4.2, Wi-Fi b/g/n, NFC, and A-GPS போன்றவற்றினை இணைப்பு ஆதரவுகளாக கொண்டுள்ளது.
Samsung Galaxy Watch Active 2 :
இதன் 44mm வகையினைப் பொறுத்தவரை 360×360 பிக்சல்கள் கொண்ட வாட்சானது 1.4 இஞ்ச் சூப்பர் AMOLED display கொண்டுள்ளது.
இது 1.5 ஜிபி ரேம் மற்றும் 4 ஜிபி உள்ளடக்க மெமரியுடன் இணைக்கப்பட்டுள்ளது, இது மேலும் Exynos 9110 பிராஸசர் மூலம் இயக்கப்படுகிறது.
இது 340mAh பேட்டரியைக் கொண்டு இயங்கும் தன்மையானது.