Mobile

ரூ.50,300 என விலை நிர்ணயம் செய்யப்பட்ட சேம்சங்க் கேலக்ஸி டேப் எஸ்6!

சாம்சங் நிறுவனத்தின் கேலக்ஸி டேப் எஸ்6 அதிகாரப்பூர்வமாக அறிமுகமாகியுள்ளது.

7,040mAh பேட்டரி மற்றும் 64-bit octa-core ப்ராசஸர் போன்ற பிரதான அம்சங்களை கொண்டிருக்கும் இந்த டேப்ளெட் ஆனது புதிய மற்றும் மேம்பட்ட S Pen உடன் பொருத்தப்பட்டிருக்கிறது. மேலும் சிறந்த மல்டிமீடியா அனுபவத்திற்காக நான்கு ஸ்பீக்கர்களையும் கொண்டுள்ளது. 

ரூ.50,300 என விலை நிர்ணயம் செய்யப்பட்ட சேம்சங்க் கேலக்ஸி டேப் எஸ்6!

இதர அம்சங்களை பொறுத்தவரை, சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்6 ஆனது 8ஜிபி ரேம் உடனான 7nm 64-பிட் ஆக்டா கோர் ப்ராசஸர் மூலம் இயக்கப்படுகிறது. இதன் SoC பற்றிய தெளிவான விவரம் இன்னும் வெளியாகவில்லை. 256 ஜிபி வரையிலான உள்ளடக்க சேமிப்புத்திறனை கொண்டுள்ள இந்த டேப்ளெட் மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட் வழியாக 1TB வரை மெமரி நீட்டிப்பை ஆதரிக்கிறது. 


கேமராவை பொறுத்தவரை, சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்6, ஒரு 13 மெகாபிக்சல் லென்ஸ் மற்றும் மற்றொரு 5 மெகாபிக்சல் லென்ஸ் உடனான இரட்டை பின்புற கேமரா அமைப்பை கொண்டுள்ளது. முன்பக்கத்தில் செல்பீ மற்றும் வீடியோ சாட்டிற்கான 8 மெகாபிக்சல் கேமராவை கொண்டுள்ளது. 


முரட்டுத்தனமான 7,040 எம்ஏஎச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படும் இந்த டேப்ளெட்டின் எஸ் பென்னில் வயர்லெஸ் சார்ஜிங் கொண்ட 0.35 எம்ஏஎச் பேட்டரி உள்ளது. இது பத்து நிமிட சார்ஜ்ஜிற்கு 10 மணிநேர பேட்டரி ஆயுளை வழங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. 


அமெரிக்காவில் சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்6-ன் 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மாடலின் விலையானது 649 அமெரிக்க டாலர்கள் (தோராயமாக ரூ.44,800) என்கிற நிர்ணயத்தையும், இதன் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி மாடலானது தோராயமாக ரூ.50,300 ஆகும்.

மவுண்டன் கிரே, கிளவுட் ப்ளூ மற்றும் ரோஸ் ப்ளஷ் ஆகிய மூன்று வண்ண விருப்பங்களின் கீழ், வருகிற செப்டம்பர் 6 ஆம் தேதி முதல் அமெரிக்க விற்பனையை தொடங்குகிறது. இதன் இந்திய வெளியீடு மற்றும் விற்பனை பற்றிய வார்த்தைகள் ஏதுமில்லை. 


Related posts

ஜூலை 20 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகமாகிறது ரெட்மி நோட் 9 ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil

ஐரோப்பாவில் அறிமுகமானது ரெட்மி 9 ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil

நவம்பர் மாதம் வெளியாகும் Realme X2 Pro!!

TechNews Tamil