சாம்சங் நிறுவனம் நாளை கேலக்ஸி டேப் எஸ்6 5ஜி மாடலை அறிமுகம் செய்ய உள்ளது. இந்த டேப்லெட் மாடல் 5ஜி ஆதரவுடன் வெளிவரும் என்பது ஏற்கனவே அறிந்த செய்தியாகும்.
இந்த சாதனத்தின் மாடல் எண் T866N ஆகும். இந்த சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்6 5ஜி மாடல் 10.5 இன்ச் டிஸ்பிளேவினைக் கொண்டுள்ளது. மேலும் இது 1600 x 2560 பிக்சல்கள் தீர்மானம் கொண்டுள்ளது.
மேலும் இது ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 855 சிப்செட் வசதி கொண்டதாக உள்ளது. மேலும் இது அட்ரினோ 640ஜிபியு வசதி கொண்டதாகவும், மேலும் இது ஆண்ட்ராய்டு 9பை இயங்குதளம் கொண்டதாகவும் உள்ளது.
கேமராவினைப் பொறுத்தவரை, 13எம்பி ரியர் கேமரா மற்றும் 5எம்பி செல்பீ கேமரா போன்றவற்றினைக் கொண்டுள்ளது.

மெமரியினைப் பொறுத்தவரை 6ஜிபி/8ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி/256ஜிபி உள்ளடக்க மெமரி வசதி கொண்டதாகவும் உள்ளது. மேலும் இது கூடுதல் மெமரி நீட்டிப்பு ஆதரவினைக் கொண்டுள்ளது.
சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்6 5ஜி மாடல் 7040எம்ஏஎச் பேட்டரி கொண்டு சக்தியூட்டும் தன்மை கொண்டதாக உள்ளது. இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை வைஃபை, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப்-சி போர்ட் போன்றவற்றைக் கொண்டுள்ளது.