Mobile

மிஸ்டிக் நேவி நிறத்தில் சாம்சங் கேலக்ஸி டேப் எஸ் 7 வெளியீடு!!

மொபைல்போன் தயாரிப்பு நிறுவனமான சாம்சங் நிறுவனம் சாம்சங் கேலக்ஸி டேப் எஸ் 7 மாடலினை மிஸ்டிக் நேவி நிறத்தில் இன்று அறிமுகம் செய்துள்ளது. இந்த சாம்சங் கேலக்ஸி டேப் எஸ் 7 குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.

சாம்சங் கேலக்ஸி டேப் எஸ் 7 ஒன் யுஐ 3 மென்பொருள் புதுப்பிப்பினைக் கொண்டுள்ளது. மேலும் இந்த சாம்சங் ஒன் யுஐ 3.0 11 இன்ச் எல்சிடி டிஸ்பிளே கொண்டதாகவும், மேலும் 2560 x 1600 பிக்சல்கள் திரை தீர்மானம் கொண்டுள்ளது.

சாம்சங் கேலக்ஸி டேப் எஸ் 7 குவால்காம் ஸ்னாப்டிராகன் 865+ சிப்செட் உடன் அட்ரினோ 650 ஜி.பீ. சேமிப்பு வசதியினையும், மைக்ரோ எஸ்.டி கார்டு ஸ்லாட் வழியாக 1TB வரை சேமிப்பி வசதியினைக் கொண்டதாக உள்ளது.

மிஸ்டிக் நேவி நிறத்தில் சாம்சங் கேலக்ஸி டேப் எஸ் 7 வெளியீடு!!

மெமரி அளவு என எடுத்துக் கொண்டால் 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி உள் சேமிப்பு வசதியினைக் கொண்டுள்ளது. பாதுகாப்பு அம்சம் எனக் கொண்டால் பக்கவாட்டில் பொருத்தப்பட்ட கைரேகை சென்சார் கொண்டுள்ளது.

இது Android 10 இல் OneUI 2.0 உடன் இயங்குவதாக உள்ளது. சாம்சங் கேலக்ஸி டேப் எஸ் 7 சாதனம் 7040 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 45W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவினைக் கொண்டுள்ளது.

Related posts

இந்தியாவில் சாம்சங் கேலக்ஸி ஏ12 ஸ்மார்ட்போன் வெளியீடு!!

TechNews Tamil

சீனாவில் வெளியாகிய விவோ ஒய் 70 டி 5 ஜி ஸ்மார்ட்போன்!

TechNews Tamil

விரைவில் அறிமுகத் தயாராகியுள்ள ஐக்யூ 7 5ஜி ஸ்மார்ட்போன்!!

TechNews Tamil