Gadgets

விரைவில் வெளியாகவுள்ள சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்7 !!

சாம்சங் நிறுவனம் விரைவில் கேலக்ஸி டேப் எஸ்7 மாடலை அறிமுகம் செய்துள்ளது. இந்த கேலக்ஸி டேப் எஸ்7 மாடல் ஆகஸ்ட் 5 ஆம் தேதி கேலக்ஸி அன்பேக்டு விழாவில் அறிமுகம் செய்யப்பட்ட போதிலும் இன்னும் வெளியாகவில்லை.

இந்த சாம்சங் டேப்லெட் இந்த மாத இறுதிக்குள் வெளியாகும் என்று தெரிகிறது.  சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்7 குறித்த விவரங்களை இப்போது பார்க்கலாம்.

இந்த டேப்லெட் 11 இன்ச் WQXGA எல்டிபிஎஸ் டிஎஃப்டி டிஸ்ப்ளேவினைக் கொண்டதாக உள்ளது, மேலும் இது ஆக்டாகோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 865 பிளஸ் பிராசஸர் வசதியினைக் கொண்டுள்ளது.

விரைவில் வெளியாகவுள்ள சாம்சங் கேலக்ஸி டேப் எஸ்7 !!

மேலும் மெமரி அளவினைப் பொறுத்தவரை அதிகபட்சமாக 8 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி, மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதியினைக் கொண்டுள்ளது.

கேமராவினைப் பொறுத்தவரை, 13 எம்பி பிரைமரி கேமரா, 5 எம்பி வைடு ஆங்கில் லென்ஸ், 8 எம்பி செல்பி கேமரா கொண்டுள்ளது. 

மேலும் 4ஜி (ஆப்ஷனல்), வைபை 6, ப்ளூடூத் 5.0, ஜிபிஎஸ், யுஎஸ்பி டைப் சி போர்ட் போன்றவற்றினை இணைப்பு ஆதரவாகவும், மேலும் பேட்டரி அளவினைப் பொறுத்தவரை 8000 எம்ஏஹெச் பேட்டரி கொண்டு சக்தியூட்டுவதாக உள்ளது.

Related posts

அசரவைக்கும் அம்சங்களுடன் கோடாக் சிஏ ப்ரோ 43 இன்ச் ஸ்மார்ட் டிவி வெளியீடு!

TechNews Tamil

இந்தியாவில் சிறப்பு அம்சங்களுடன் அசுஸ் ExpertBook B1400 லேப்டாப் அறிமுகம்!

TechNews Tamil

5883 டாலர் விலையில் அறிமுகமான வியூ நிறுவனத்தின் மாஸ்டர்பீஸ் டிவி!

TechNews Tamil