சாம்சங் கேலக்ஸி டேப் ஏ 2020 ஆனது அமெரிக்காவில் அறிமுகமான நிலையில், நாளை விற்பனையினைத் துவக்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
1. Samsung Galaxy Tab A 2020 3 ஜிபி + 32 ஜிபி மெமரி கொண்ட வகையின் இந்திய விலை – ரூ.21,200

சாம்சங் கேலக்ஸி டேப் ஏ 2020 டேப்லெட் ஆண்ட்ராய்டு 9 இயங்குதளம் கொண்டு இயங்கக்கூடியதாக உள்ளது. இந்த டேப்லெட் 8.4 அங்குல முழு எச்டி உடனான 1,200×1,920 பிக்சல்கள் தீர்மானம் கொண்ட டிஎஃப்டி டிஸ்பிளேவினைக் கொண்டு உள்ளது.
மேலும் இது ஆக்டா கோர் பிராசசர் மூலம் இயங்குவதாய் உள்ளது. கேமராவினைப் பொறுத்தவரை இந்த டேப் பின்புறத்தில் ஒரு கேமரா மற்றும் முன்புறத்தில் ஒரு கேமராவினைக் கொண்டு உள்ளது.
பின்புற கேமரா 8 மெகாபிக்சல் ஷூட்டர் மற்றும் முன்பக்கத்தில் 5 மெகாபிக்சல் ஷூட்டரைக் கொண்டதாக உள்ளது.
மெமரி அளவினைப் பொறுத்தவரை இது, 32 ஜிபி ஆன்போர்டு ஸ்டோரேஜ் வேரியண்டைக் கொண்டுள்ளது. இதன் ஸ்டோரேஜ் ஆனது மைக்ரோ எஸ்டி கார்டு வழியாக 512 ஜிபி வரை நீட்டிக்கக் கூடியதாக உள்ளது.
இணைப்பு ஆதரவினைப் பொறுத்தவரை இந்த டேப்லெட் 4G LTE, Wi-Fi 802.11 a/b/g/n/ac, 2.4GHz மற்றும் 5GHz பேண்டுகள், ப்ளூடூத் v5.0, GPS, a 3.5mm headphone jack மற்றும் USB Type-C போர்ட் போன்றவற்றினைக் கொண்டுள்ளது.
இது 5,000 எம்ஏஎச் பேட்டரி கொண்டு சக்தியூட்டுவதாய் உள்ளது.